2,207 முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதில், செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 17 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் நவம்பர் 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், 69% இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் என்றும் நேரடி நியமனம் மூலம் பணி நியமனங்கள் நடைபெறும் என்றும் அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.