Thu. Dec 5th, 2024

சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத்துறைக்கான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அத்துறையின் அமைச்சரான பி.கே.சேகர் பாபு தனது துறையில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களை அறிவித்தார்.

அதன் சிறப்பு அம்சங்கள்:

திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் தமிழ்நாட்டில் இதுவரை ரூ.641 கோடி கோயில் சொத்துக்கள் மீட்க்கப்பட்டுள்ளது..நிகழாண்டு இறுதிக்குள் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்படும்.

நாளை முதல் ( செப். 5) தமிழகத்தில் உள்ள எந்த கோவில்களிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கமாட்டாது!

ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும்.

இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.13 கோடி ஒதுக்கப்படும்

அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி காலத்தில் வழங்கப்படும் ஊக்கத் தொகை ரூ 1,000ல் இருந்து ரூ 3,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்

திருக்கோயில்களின் பாதுகாப்பிற்கென 10,000 பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அறிமுகப்படுத்தியுள்ள திட்டத்தை பாஜக வரவேற்பதாக தெரிவித்தார்.