சுற்றுச்சூழல் துறைக்கான மானியக் கோரிக்கையை சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் மெய்யநாதன் தாக்கல் செய்தார். தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். அதன் விவரங்கள் :
சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் பெறும் வகையில் 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்
அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் பெறும் வகையில் 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.
மெரினா கடற்கரை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், நாகை, விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.
நீரின் தரம், சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் கடற்கரை பகுதிகளில் தரம், பாதுகாப்பு உள்ளிட்ட கூறுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து தூய்மையான சுற்றுச்சூழலை கொண்ட கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்படுகிறது.
சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.
ஆயிரம் விளக்கு பகுதியில் பசுமை பூங்கா அமைத்து, சாலை வசதியை மேம்படுத்த ரூ.2 கோடி
தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் மரம் நடுவதற்கு ரூ. 50 கோடி ஒதுக்கப்படும்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ. 2 கோடி பசுமைப் பூங்கா அமைக்கப்படும்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை ரூ. 32 கோடியில் நவீனப்படுத்தப்படும்.
பொங்கல் மற்றும் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி அரசு சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.
தமிழகத்தில் 4 இடங்களில் ஒலிம்பிக் மண்டலங்கள் அமைத்து வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிற்கு தமிழகத்திலிருந்து 50 பேர் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
