Sat. Nov 23rd, 2024

சட்டப்பேரவையில் இன்று வீட்டு வசதித்துறைக்கான மானியக் கோரிக்கையை, அத்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி தாக்கல் செய்து 35 புதிய அறிவிப்புகளை அறிவித்தார்.

அதன்படி, சென்னை அயனாவரம், பாடிக்குப்பம் ஆகிய பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளும் சேலம் மாவட்டம் ஆத்தூரில் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு ரூ. 188 கோடியில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வீடடு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி தாக்கல் செய்த மானியக் கோரிக்கைகளின் முழு விவரம் இதோ….

Housing-Announcement-01.09.2021

தமிழகத்தில் 2 மாடிகளுக்கு மேல் இருக்கும் அடுக்குமாடிக் கட்டிடங்களில் கட்டாயம் லிப்ட் வசதி
தமிழக சட்டசபையில் இன்று வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக் கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது
தமிழகத்தில் இனி, புதிதாகக் கட்டப்படும் 2 மாடிகளுக்கு மேல் இருக்கும் அடுக்குமாடிக் கட்டிடங்களில் கட்டாயம் லிப்ட் (மின்தூக்கி) வசதி இருக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபையில் இன்று வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக் கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக, இனிமேல், 2 மாடிகளுக்கு மேல் புதிதாகக் கட்டப்படும் அடுக்குமாடி கட்டிடங்களில் கட்டாயம் லிப்ட் (மின்தூக்கி) வசதி இருக்க வேண்டும்.
மேலும், சாய்தள மேடை, சிறப்பு கழிப்பறை உள்ளிட்ட வசதிகளையும் செய்ய வேண்டும். பார்வையற்றோருக்கான அறிவிப்புப் பலகை, தனி வாகன நிறுத்துமிடம் ஆகியவை கட்டப்பட வேண்டியது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தனது சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.