Sat. Nov 23rd, 2024

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பங்களா ஒன்றில் நேற்று மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் இருந்து அதிகாரிகள் குழு சென்னை வந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இன்று நண்பகல்தான் இந்த ஆய்வு முடிவடைந்துள்ளது. அந்த பங்களா, இந்தியா முழுவதும் பிரபலமான மோசடி பேர்வழி சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமானது என்ற முதற்கட்ட தகவலும் வெளியாகியுள்ளது.
யார் இந்த சுகேஷ் சந்திரசேகர்?


2018 ஆம் ஆண்டில் இரட்டை இலைச் சின்னத்தை தக்க வைப்பதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கைது செய்தனர். அப்போது, தேர்தல் ஆணையத்திற்கும் டிடிவி தினகரனுக்கும் இடைத்தரகராக செயல்பட்டவர் என்று குற்றம் சாட்டப்பட்டவர்தான் சுகேஷ் சந்திரசேகர். இந்த வழக்கில் இவரும் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள பிரபலமான திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.


நாடு முழுவதும் தொழில் அதிபர்கள், பிரபலமான அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்களை ஏமாற்றி மோசடி செய்து பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ள சுகேஷ் சந்திரசேகர், டெல்லி சிறையில் இருந்து பரேல் மூலம் விடுதலையாகி பெங்களூர் வந்தார். அவரின் தந்தை இறந்துவிட்டார் என்றும் அதற்கான இறுதிச்சடங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்தை கூறி சிறையில் இருந்து விடுப்பு பெற்று வந்த சுரேஷ் சந்திரசேகர், 6 மாதத்திற்கு மேலாக வெளியிலேயே தான் சுற்றிக் கொண்டிருக்கிறார். இவ்வளவு காலம் இவருக்கு எப்படி பரேல் வழங்கப்பட்டது என்பதற்கான காரணத்தையும் டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, ஆந்திராவைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி, வங்கி ஒன்றில் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று மோசடி செய்து விட்டார் என்ற வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளளார். இந்த மோசடி குறித்து விசாரித்த போது, இதிலும் சுகேஷ் சந்திரசேகருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. இதேபோல, ஒரு டஜனுக்கு மேலான வழக்குகள் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிராக இருப்பதாக டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள சுகேஷ் சந்திரசேகரின் சென்னை பங்களாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிசோதனையில் 20 சொகுசு கார்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத பல லட்ச ரூபாய் ரொக்கப்பணம், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சோதனையின் போது, சுகேஷ் சந்திரசேகர் தங்கியிருந்த சென்னை கடற்கரை சாலையில் உள்ள பங்களாவிற்கு திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரனின் மனைவி இந்திரா ராஜேந்திரன் பலமுறை வந்து சந்தித்து சென்றுள்ளதற்கான ஆவணங்களையும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் கசிகின்றன.

சுகேஷ் சந்திரசேகருக்கும் இந்திரா ராஜேந்திரனுக்கும் பல்வேறு விவகாரங்களில் தொடர்புள்ளதாகவும், பிரதமர் அலுவலகம், சி.பி.ஐ., டெல்லி அலுவலகம் மற்றும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் உயர் அதிகாரிகள் பேசுவதைப் போல, அந்தந்த அலுவலகங்களின் தொலைபேசி எண்களை போல போலியான எண்களின் மூலம் மலேசியாவில் உள்ள ஆட்சி அதிகாரத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கும், உள்நாட்டில் உள்ள பிரபல தொழில் அதிபர்களுக்கும் தொடர்புகொண்டு, பாரதிய ஜனதா கட்சிக்கு நிதி திரட்டுவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கசிகின்றன.

இதனை உறுதிப்படுத்த முடியாத போதும், சுகேஷ் சந்திரசேகருக்கும், இந்திரா ராஜேந்திரனுக்கும் நல்ல நட்பு உண்டு என்றும் இருவரும் இணைந்து பல்வேறு சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட்டிருப்பது உண்மை என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
இனையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த தகவல் குறித்து இந்திரா ராஜேந்திரன்தான் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு எதிராக பரப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி விழும்.

இணையத்தில் தீயாக பரவும் தகவல் இதுதான்….

Sukash Chandrasekar was released on parole from Tihar Jail in November 2020 to perform his father’s last rites and his parole was extended for six months under mysterious circumstances.

According to highly placed sources in CBI, during his parole, he stayed in Chennai in his ECR Bungalow, wife of DMK Thiruvallur MLA VG Rajendran – Indira Rajendran used to meet Sukash frequently.

Indira Rajendran befriended a Special Advisor to Malaysian PM one Selvam Ramaraj, when she visited Malaysia to generate funds for her medical, dental institutions.

Details of her Institutions are :

Indira Medical College And Hospitals
Priyadarshini Dental College & Hospital
Indira Institute Of Engineering & Technology
Indira College Of Nursing
Indira School Of Nursing
Indira Institute Of Management & Research
Indira College Of Education
Indira Teacher Training Institute

Indira Rajendran, W/o DMK MLA VG Rajendran, introduced the conman Sukash Chandrasekar to the Malaysian PM advisor Selvam Ramaraj as Saket, Additional Secretary of PMO. Sukash, by spoofing the landline of PMO, spoke to Selvam Ramaraj as Saket and told that he is entrusted with the task of collecting funds for BJP. And Sukash @ Saket asked Selvam Ramaraj to collect funds from various dignitaries, including VK Sasikala. As a follow up, Sukash, contacted the various dignitaries in several avatars like officer in PMO, Officer in CJI, Supreme Court, Director CBI, etc by spoofing landline numbers.

They contacted TDP MP Rayappatti Sambasiva Rao who is in CBI net for cheating Union Bank of India to the tune of 7926 crores. A suspicious Sambasiva Rao alerted CBI about the transaction and two people were arrested. This transaction happened only through Indira Rajendran, W/o VG.Rajendran.

Further, Sukash Chandrasekar also contacted various MLA aspirants by promising them tickets in both DMK & ADMK, by posing in various avatars.

However, the CBI officials never probed the role of either Indira Rajendran or Sukash’s wife Leela Paulose. Highly placed sources in CBI say, Indira Rajendran, managed to convince one Sathish, Inspector of Police in CBI and following this, the CBI never probed the role of Indira Rajendran in a serious case, where Director CBI was impersonated. She managed to influence JD, CBI, Hyderabad Zone also, add sources.

None of the agencies across India were able to fix Sukash Chandrasekar and that is why he continues his full time con business till today.