Fri. Apr 4th, 2025

தமிழகத்தில் உள்ள மீனவர்கள் அமைதியுடன் வாழ முடியவில்லை என்று மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி.திருச்சி சிவா வருத்தத்துடன் தெரிவித்தார்..

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு அதிமுக எம்.பி. தம்பிதுரையும் கண்டனம் தெரிவித்து பேசினார்..

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்த வெளியுறவு த்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது என குறிப்பிட்டார்..