சட்டப்பேரவையில் நிதித்துறை தொடர்பாக வெள்ளை அறிக்கைப் பற்றியோ, நிதி நிலை அறிக்கைப் பற்றியோ அதிமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினாலும், உடனுக்குடன் சுடச்சுட பதிலளிக்கிற ஸ்டைலை கையாண்டு வருகிறார், நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல்ராஜன்.
பொதுவெளியில் நிதியமைச்சர் பேட்டியளிக்கிறபோது, செய்தியாளர்களின் கேள்விக்கு ஒன்றிரண்டு நேரங்களில் அவர் நெத்தியடியாக பதிலளிப்பதைப் பார்த்து, இன்னும் கொஞ்சம் பக்குவமாக பேசலாமே என்று நடுநிலை வாதிகள் கூறத் தொடங்கிவிட்டனர்.
ஆனால், சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பேசும் போது கிண்டலும் நக்கலும் தூக்கலாக இருப்பதால், ஆளும்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி எதிர்வரிசையில் உள்ள அனுபவமிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட உள்ளுக்குள் ரசிக்க தொடங்கிவிட்டனர் என்கிறார்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில எம்.எ.ஏ.க்கள்.
சட்டப்பேரவையில் நிதித்துறை தொடர்பான கேள்விகள், பட்ஜெட் தாக்கல் மீதான விவாதத்திற்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளிக்கும் பதில்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரசிக்க துவங்கிவிட்டார் என்கிறார்கள் சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை நாள்தோறும் கவனித்து வரும் மூத்த ஊடகவியலாளர்கள்.
அதுவும் பாஜக உறுப்பினர்கள் பேசும் போது, அவர்களை மடக்கி அமர வைக்கும் கலையை அழகாக செய்கிறார் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் என்றும் இதற்கு முன்பு இருந்த நிதியமைச்சர்கள் யாருமே கையாளாத பதிலளிக்கும் பாணியை தற்போதைய நிதியமைச்சர் பிடிஆர் அசத்தலாக மேற்கொண்டு வருகிறார் என்ற பாராட்டுகள் எல்லா தரப்புகளிலும் இருந்தும் எழுந்து கொண்டிருக்கின்றன.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போதெல்லாம், நிதியமைச்சர் குறுக்கிட்டு தரும் பதில்கள், செம காமெடியாக இருக்கிறது என்கிறார்கள் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலர். சிரித்து சிரித்து வயிறே புண்ணாகி விடுகிறது என்று கூறும் அவர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள் என்றும் கிண்டலடிக்கிறார்கள்.
அப்படிபட்ட ஒரு காட்சிதான் இது….