Fri. Apr 11th, 2025

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை அமல்படுத்திய தமிழக அரசு, பெண் ஓதுவார்கள் உள்பட நூற்றுக்கணக்கானோரை கோயில்களில் பணி நியமனம் செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து விளிம்பு நிலையில் உள்ள அர்ச்சகர் உள்பட பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், மாநிலம் முழுவதும் பல்வேறு கோயில்களில் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட தமிழ் பாடல்களைப் பாடி இறை வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். கோயில்களுக்கு வரும் பக்தர்களும் தமிழில் மொழியிலான அர்ச்சனையை கேட்டு மனமகிழ்ச்சியுடன் இறைவழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பது மக்கள் நீதி மய்யத்தின் செயல் திட்டங்களில் ஒன்று என்று, அந்த கட்சியின் நிரந்தர தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். அதன் விவரம் இதோ….