Sat. Nov 23rd, 2024

10.5% வன்னியர் உள் ஒதுக்கீட்டை அமல்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி நன்றி தெரிவித்துள்ளார். திமுக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி, ‘கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை அமல்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக முதல்வரிடம் நேரில் சென்று வலியுறுத்தி இருந்தோம்.

சட்டவல்லுனர்களுடன் ஆலோசித்து நல்ல முடிவை அறிவிப்பதாக முதல்வர் தெரிவித்து இருந்தார்.கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி,’என்று கூறினார். தொடர்ந்து பேசிய ஜி.கே.மணி, ‘சிறப்பாக செயல்பட்டு இந்திய அளவில் தமிழ்நாடு முதல்வர் முதலிடம் பிடித்தது தமிழ்நாட்டு மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு பெருமை அளிக்கிறது.

கொரோனாவை கட்டுப்படுத்தியது, உயிரிழப்பை தடுத்த நடவடிக்கைகளுக்காக முதலிடம் பிடித்தார் மு.க.ஸ்டாலின்.திமுக ஆட்சி பெற்ற நேரத்தில் உயிர் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணம் மக்களிடையே இருந்தது.அத்தகைய சூழலில் முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமை செயலாளர்கள், மருத்துவர்கள் உழைத்த விதிம் சிறப்பானது.இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்,’என்றார்.