Sat. Nov 23rd, 2024

லிவுற்ற பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக தனியாக மகளிர் கூட்டுறவு வங்கி துவக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., சட்டப்பேரவையில் வேண்டுகோள் விடுத்தார்.

சட்டப்பேரவையில் இன்று நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:..

கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வை தமிழகத்தில் அமல்படுத்த முடியாத அளவுக்கு தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதிமுக அரசு அப்போது எதுவும் செய்யவில்லை. நீட்டை தடுக்கும் முதல் நடவடிக்கையாக ஏ.கே.ராஜன் தலைமையிலான கருத்து கேட்பு குழு அமைக்கப்பட்டு, அந்த குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரையும் பாதிக்கும். இதில், கட்சி பேதம் எதுவும் இல்லை. அனைவரும் ஒன்றிணைந்து நீட் தேர்வை ரத்து செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
நீட் தேர்வு ரத்து என்பதை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்.
அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் பெயரைச் சூட்ட வேண்டும்.

கொரோனோவை விரட்டுவதில் ஒன்றிய நரேந்திர மோடி அரசு மூட நம்பிக்கையுடன் செயல்பட்டது. ஒன்றிய அரசு எதைச் சொன்னாலும் அதை அப்படியே செய்யும் அடிமை அதிமுக அரசு, ஒன்றிய அரசு கூறியதைப் போல் மணியடித்தது. கைத்தட்டி, ஒலியெழுப்பு கொரோனோவை விரட்டியதாக எண்ணி மூட நம்பிக்கையுடன் செயல்பட்டது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனோவின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியது. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய அரசு, விழிப்புடன் செயல்பட்டது. புற்றுநோயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. சென்னையில் உள்ள நடுக்குப்பம், அயோதிக்குப்பம் உள்ளிட்ட பின்தங்கிய பகுதிகளில் உள்ள பெண்களின் வாழ்வதாரத்திற்கு மகளிருக்கு என தனி கூட்டுறவு வங்கியை உருவாக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது இலவச தொலைக்காட்சியை, கலைஞர் தொலைக்காட்சி என்றுதான் சொல்லி வந்தார்கள். இன்று திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதால், தற்போது மாநகர பேருந்துகளை ஸ்டாலின் பேருந்து என்றே தற்போது சொல்லி வருகிறார்கள்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.