Sat. Nov 23rd, 2024

கொரோனாவை சரியான முறையில் கையாளவில்லை என்ற விமர்சனம் மலேசிய பிரதமராக முகைதீன் யாசின் மீது இருந்துள்ளது.

மலேசிய நாட்டு பிரதமர் முகைதீன் யாசின். 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த தேர்தலில் சிறிய பெரும்பான்மையுடன் அவர் பிரதமர் ஆனார்.

இந்த நிலையில் ஆளும் கட்சி கூட்டணியில் இருக்கும் ஐக்கிய மலேசிய தேசிய அமைப்பு கட்சி ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் அவர் பெரும்பான்மையை இழந்தார்.

இதைத் தொடர்ந்து முகைதீன் யாசின் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. செப்டம்பரில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதாக அவர் கூறினார்.

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை முகைதீன் யாசின் முதன் முறையாக தனக்கு பெரும்பான்மை இல்லை என்பதை ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கு ஏற்ற வகையில் மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மன்னர் சுல்தான் அப்துலாவிடம் கொடுத்தார்.

முகைதீன் யாசின் 18 மாதங்களே தனது பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவை சரியான முறையில் கையாளவில்லை என்ற விமர்சனமும் இருந்தது