பிரபல இசை அமைப்பாளரும் , இளையராஜாவின் தம்பியுமான கங்கைஅமரன், பல படங்களில் வசனகர்த்தாவாகவும், பல ஹிட் பாடல்களையும் எழுதியும், பல ஹிட் படங்களை இயக்கியும் உள்ளார்.
இசை அமைப்பாளராக, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, சுவரில்லாத சித்திரங்கள் , ராமாயி வயசுக்குவந்துட்டா, மௌன கீதங்கள், வாழ்வே மாயம், நம்ம ஊரு நல்ல ஊரு, என் தங்கச்சி படிச்சவ போன்ற மாபெரும் ஹிட் படங்கள் உட்பட சுமார் 55 படங்களுக்கு பணிபுரிந்துள்ளார்.
ஆரம்பத்தில், 1979ல் புதிய வார்ப்புகள் , 80ல் பாமா ருக்குமணி படங்களில் நடித்த கே.பாக்கியராஜ்-க்கு டப்பிங் குரல் கொடுத்தார், கங்கைஅமரன். அதன் பின்பு பாடகராகவும் ஏழு படங்களில் பாடியுள்ளார்.
சூப்பர் ஹிட் படமான கோழிகூவுது படம் மூலம் டைரக்டராகவும் மாறினார். தொடர்ந்து,எங்க ஊரு பாட்டுக்காரன், செண்மகமே செண்பகமே, கரகாட்டக்காரன், கும்பகர தங்கையா, வில்லு பாட்டுக்காரன், சின்னவர், தெம்மாங்கு பட்டுக்காரன் போன்ற ரிகார்ட் பிரேக் செய்த படங்கள் உட்பட சுமார் 19 படங்கள் டைரக்ட் செய்துள்ளார்.
அதேபோல், 16 வயதினிலே படத்தில் இடம் பெற்ற செந்தூரப்பூவே.. செந்தூரப்பூவே, சோழம் விதக்கையிலே.. இந்த பாடல்கள் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார் . கிழக்கே போகும் ரயில் – பூவரசம்பூ.. பாடல், முள்ளும் மலரும் – நித்தம் நித்தம் நெல்லு சோறு .. நிழல்கள்- பூங்கதவே.. போற்ற சுமார் 35 க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.
டைரக்டர் வெங்கட் பிரபுவின் தந்தையான இவர் அவ்வபோது முக்கிய கேரக்டரில் நடிக்கவும் செய்வார். கரகாட்டக்காரன், இதயம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சென்னை28, போன்ற படங்களில் நடித்துள்ளார். அனைத்து படங்களும் ஹிட் தான். 2013 க்கு பிறகு மீண்டும், பிரபல டைரக்டர் ஹரி இயக்கத்தில் பெயரிடப்படாத #AV33 என்று உருவாகும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். காரைக்குடியில் அருண்விஜய் நடித்து வரும் இந்த படத்தில், கதையின் ஒரு முக்கிய திருப்பமான காட்சியில் ஜோசியராக நடித்துள்ளார்.
காலையில் கதை காட்சிகளும்.. இரவில் சண்டை காட்சிகளுமாக இரவு பகலாக அருண்குமார் நடித்து வருகிறார். அனல் அரசு சண்டை காட்சி அமைத்தார்.
தூத்துக்குடி, காரைக்குடியெய் தொடர்ந்து ராமேஸ்ரவத்தில் தொடர்ந்து படபிடிப்பு நடைபெறும்.
அருண்விஜய், பிரியா பவானிசங்கர், ராதிகா, யோகிபாபு, கருடா ராம், ராஜேஷ், தலைவாசல் விஜய், ஜெயபாலன், புகழ், போஸ் வெங்கட், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, அம்மு அபிராமி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இசை ஜிவி. பிரகாஷ். ஒளிப்பதி கோபிநாத். எடிட்டிங் ஆண்டனி. சண்டைக்காட்சி அனி அரசு. மக்கள் தொடர்பு ஜான்சன், தயாரிப்பு டிரம்ப் ஸ்டிக்கிஸ். தயாரிப்பு வெடிக்காரன்பட்டி எஸ். சக்திவேல்.