Sat. May 18th, 2024

தமிழ்நாடு அரசின் வரவு செலவு அறிக்கையில், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள ஊடகங்களுக் கான செய்தி.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள, 2021 -22 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.

2020-21 ஆம் ஆண்டிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ 15773 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது 2021-22 ஆம் ஆண்டிற்கு ரூ 18,930.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்புக் குறியது.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ,இந்த நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க முயல வேண்டும்.

மகப்பேறு விடுப்புக் காலத்தை அதிகரித்திருப்பது பாராட்டத்தக்கது.

பேறுகால
மற்றும் சிசு மரணவிகிதத்தை குறைத்தல்,குழந்தைகள் வளர்ச்சிக் குறைபாடு களைதல், விபத்து தடுப்பு, பாதாள சாக்கடைத் திட்டம்,குடிநீர் வழங்கல் போன்றவற்றிற்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் வரவேற்க்கத் தக்கது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் வரவேற்கத்தக்கது.

‘மக்கள் மொழியான தமிழில் அரசு செயல்பட வேண்டும்,கணினி மயம் வேண்டும்,வீண் செலவு கூடாது, உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட வேண்டும்,’ போன்ற நிதி அமைச்சரின் அறிவிப்புகள் வரவேற்புக்குறியது.

அவை அனைத்தையும் மருத்துவத்துறையிலும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப் பட வேண்டும்.

மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவக் கல்வி இயக்குனரகம்,தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் இணைய தளங்களையும் தமிழிலும் அமைத்திட
வேண்டும் .

அனைத்து நோயாளிகளின் மருத்துவக் குறிப்பேடுகள்,பரிசோதனை முடிவுகள் அனைத்தையும் கணினி மயமாக்கிட வேண்டும்.

அது, தரமான ,
விரைவான சிகிச்சை அளிக்கவும், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் உதவும்.

‘தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம்’ மூலம் காலை நேரங்களில் அரசு மருத்துவ
மனைகளில் உள்ள அனைத்து வசதிகளும்,மருத்துவ சேவைகளும்
(புற நோயாளிகள் பிரிவு , அறுவை அரங்கம், இரத்ததப் பரிசோதனை நிலையம்,
சி.டி.ஸ்கேன், சிறப்பு மருத்துவப் பிரிவு போன்ற அனைத்தும் ) மாலை நேரங்களிலும் செயல் பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கென தனியாக மருத்துவர்களையும் ஊழியர்களையும் நியமித்திட வேண்டும். இதன் மூலம் காலையில் மருத்துவமனைக்கு வர இயலாத, வேலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள்,
உழைக்கும் மக்கள் மாலை நேரங்களில் அரசு மருத்துவ
மனைகளுக்கு வந்து பயன் பெற முடியும்.பொதுமக்களுக்கும், கால தாமதமின்றி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைகள் கிடைக்கும். பல உயிர் இழப்புகளை தடுத்திட முடியும்.

மருத்துவத் துறையில் ஒப்பந்த அடிப்படையிலும் தற்காலிக அடிப்படையிலும் பணிபுரியும், மருத்துவர்கள், பல்மருத்துவர்கள், ஆயுஷ் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும்.

மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட நல்ல திட்டங்களுக்கு தனியாக நிரந்தர ஊழியர்களை நியமிக்கவேண்டும்.

மருத்துவக் கருவிகள் வாங்க ரூபாய் 741 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையில், அரசே பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் மருந்துகள்,ஊசிகள்,மருத்துவக் கருவிகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய முடியும் . இதன் மூலம் தரமாகவும் ,தட்டுபாடின்றியும், குறைந்த செலவில் மருந்துகள், மருத்துவக் கருவிகளை அரசு பெற முடியும் .

இவைகளை அரசு மருத்துவ மனைகளில் பயன் படுத்துவதின் மூலம் பெருமளவு நிதியைச் சேமிக்க முடியும்.

வேறு மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் விற்பதன் மூலம் ,வருவாய் ஈட்டவும் முடியும்.

மருத்துவ ஆராய்ச்சிக்கென தனியாக நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.தமிழக அரசே தனியாக ஒரு வைரஸ் ஆராய்ச்சி மையத்தை தொடங்கிட வேண்டும். அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு ,பதவி உயர்வு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும்.

தமிழ்நாட்டிற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு ,கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்றை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்
பட்டுள்ளது வரவேற்புக்குரியது.

ஒன்றிய அரசு மருத்துவக் கல்வியில் திணிக்கும் “நெக்ஸ்ட் தேர்வை’’ கொண்டுவரக்
கூடாது, அத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.


இவ்வாறு டாக்டர். ஜி.ஆர். இரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.