Sun. Nov 24th, 2024

பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் ஒட்டுமொத்த தமிழகத்தின் நிதி நிலைமை எந்தளவுக்கு மோசமாகிவிட்டது என்பதை வெள்ளை அறிக்கையாக இன்று தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டு, செய்தியாளர்களுக்கு விளக்கினார்.

அதன் சிறப்பு அம்சங்கள்…….

உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் ரூ.2,577 கோடி இழப்புதமிழ்நாடு அரசின் வருமானம் சரிவு –

தமிழ்நாட்டிற்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக மத்திய அரசு தர வேண்டிய ரூ. 20,033 கோடி ரூபாய் இன்னும் வர வேண்டியுள்ளது:

ஒன்றிய அரசின் உதய் மின்திட்டத்தை அமல்படுத்தியதால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.48,500 கோடி இழப்பு…

மின்சார வாரியத்தின் கடன் ரூ.2 லட்சம் கோடியாக உள்ளது

உலகளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் தமிழகம் அதிகம் பாதிக்கப்படும்” * “பேரிடர்களால் பல மாநிலங்கள் தமிழ்நாட்டை விட அதிகம் பாதிக்கப்படுகிறது

குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மின்வாரியத்திற்கு உள்ளாட்சி அமைப்புகள் வைத்துள்ள வரி பாக்கி ரூ.1,743.30 கோடி

தமிழ்நாடு அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.5.24 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

வருவாற் பற்றாக்குறை இருந்ததால், நிதிப் பற்றாக்குறை பல மடங்கு உயர்ந்துவிட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல்களை சரியான தருணங்களில் நடத்ததால் ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் ஒரு கோடி ரூபாய் அளவுக்கான நிதி தவறான வழிகளில் செலவழிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியாளர்களுக்கு அரசியல் உறுதியும், நிர்வாகத் திறமையும் இல்லை

அதிமுக அரசின் வீண் செலவால் தனிநபர் ஒருவருக்கு ரூ.50000 இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒனறிய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி 33% குறைந்துவிட்டது.

பெரு நிறுவனங்களுக்கான வரி மற்றும் வருமான வரியை குறைந்து ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசு அதிகரித்து இருப்பது பாதகமாக செயல்.

ஒரு லிட்டர் டீசல், பெட்ரோல் மீதான வரி ரூ.12 ல் இருந்து ரூ.32 ஆக உயர்ந்துள்ளது. அந்த வரியில் 31.50 ரூபாயை ஒன்றிய அரசே எடுத்துக் கொண்டு, 50 பைசாவை மட்டுமே அனைத்து மாநிங்களுக்கும் ஒன்றிய அரசு பிரித்துத் தருகிறது.

ஒன்றிய அரசின் உதய் மின்திட்டததை அமல்படுத்தியதால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.48,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 11 வது இடத்திற்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுவிட்டது.

கடந்த பத்தாண்டுகளில் மக்களின் வரிப்பணத்தை அள்ளித் தெறித்ததைப் போல் செயல்படாமல் மக்களின் தேவையை அறிந்து செயல்படுவோம்”

இந்த மோசமான நிதி நிலைமையை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் தாண்டி வரும்.

வாக்களித்த மக்களின் தேவையை அறிந்து அரசு செயல்படும்.

திமுக அரசாங்கம் மக்களுடன் இணைந்து செயல்படும்

நிதி நிலைமையை 5 வருட ஆட்சிக்குள் சீரமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது; எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் விடமாட்டோம்.

நீதிக்கட்சி தொடங்கி தி.மு.க ஆட்சிக்காலம் வரை சமூகநீதியை செயல்படுத்தியதால், தமிழ்நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது.

தமிழ்நாடு பணக்கார மாநிலம்; இந்தியாவுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் அதிகமான சொத்துக்கள் உள்ளன

குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் யார் எவ்வளவு பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் வதந்தி பரப்புவார்கள், ஆனால் அதில் நன்மை தான் உள்ளது

ஒருநாள் சராசரி வட்டியாக ரூ.87.31 கோடியை தமிழ்நாடு அரசு செலுத்தி வருகிறது”

20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது

தமிழக நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியீடு , 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்

தொடர்ந்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:

வெள்ளை அறிக்கையில் ஏற்படும் தவறுகளுக்கு நான்தான் பொறுப்பு

ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அறிக்கையை ஆய்வு செய்த பின்பு அறிக்கை தயார் செய்யப்பட்டது

தமிழக அரசு வெளிப்படைத்தன்மை உடன் செயல்படுவதால் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறோம் – நிதியமைச்சர்

தமிழக அரசின் வருவாய் சரிந்துவிட்டது

தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை 3.16% ஆக உள்ளது

2006 -11 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உபரி வருவாய் இருந்தது ..

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ₨1.50 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை

இணையதளத்தில் இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்

திமுகவின் இலக்கை தெரிவிப்பதற்காக வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட படி வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட்டின்போது மொத்த கடன் ₨5,70,186 கோடியாக இருந்த‌து..

கடனை செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி சதவீதம் அதிகரிப்பு..

2016-2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வரலாறு காணாத அளவில் வருமானம் சறுக்கல்

கொரோனாவுக்கு முன்பே தமிழ்நாட்டின் வருமானம் சரிந்துவிட்டது

2016-2021 அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்வு

இவ்வாறு நிதியமைச்சர் கூறினார்..