மக்களைத் தேடி மருத்துவம் எனும் மகத்தான திட்டத்தை துவக்கி வைப்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகைப் புரிந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அம்மாவட்ட மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கொரோனோ விதிமுறைகளைப் கடைப்பிடித்து, மக்கள் வழங்கிய வரவேற்புக்கு இடையே இளம்பெண் ஒருவர், முதல்வர் காரை நிறுத்தி, விடுத்த அன்புக் கட்டளை கிருஷ்ணகிரி மாவட்டத்தை கடந்து தமிழகம் முழுவதும் வைரலாகி வருகிறது…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த முதல்வர் மு. க .ஸ்டாலின் விமான நிலையத்தில் இருந்து காரில் சூளகிரி கிராமத்திற்கு சென்றார். அப்போது வழியில் ரம்யா என்ற பெண் வழிமறித்து முகக் கவசத்தை கழட்டச் சொல்லி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப் பெற்றதற்கு உற்சாகமாக வாழ்த்தையும் தெரிவித்தார்.

