மதுரையில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் நடைபெறும் நிகழ்வில், அதன் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்கிறார். நாளை (22 ஆம்தேதி) துவங்கி 26 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஐந்து நாட்கள் விழாவிலும் மோகன் பகவத் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் மதுரை வருகையையொட்டி, இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில், மதுரை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதுதொடர்பாக, மாநகராட்சியின் பணியமைப்பு பிரிவை கவனிக்கும் உதவி ஆணையர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான உத்தரவு, திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய, மாநில அரசுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், ஆளுநர்கள் உள்ளிட்டோர் வரும் போது வழக்கமாக மேற்கொள்ளப்பபடும் சாலை சீரமைப்பு, சுகாதாரம் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை அவசர கால நிலையாக மேற்கொள்வதைப் போல, மோகன் பகவத் வருகையையொட்டியும் மேற்கொள்ள வேண்டும் என்று மதுரை மாநகராட்சி அதிகாரி பிறப்பித்துள்ள உத்தரவு, திமுக அரசுக்கு புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது.
மதுரை மாநககராட்சியின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், எந்த விதியின் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பதை விளக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது டிவிட்டர் பக்கத்தில், மாநகராட்சி அதிகாரியின் உத்தரவை பதிவேற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபோல, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும மாநகராட்சி அதிகாரியின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டிவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களிலும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
மாநகராட்சியின் உத்தரவுக்கு பல்வேறு தளங்களில் இருந்து பலமாக எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மதுரை மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது…