Sat. Apr 19th, 2025

ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அடுத்த வடுகப்பட்டி வடக்கு வீதியை சேர்ந்தவர் கமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது-வயது 35). இவரது கணவர் குமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து வடுகபட்டியில் உள்ள வீட்டை பட்டா மாறுதல் செய்வதற்காக அந்த கமலா, ஏ.வடுகபட்டி கிராம வி.ஏ.ஓ வெற்றிவேலை அணுகினார்.

அப்போது பட்டா மாறுதல் செய்து தருவதற்கு வெற்றிவேல் ரூ. 40 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். பேரம் பேசி இறுதியாக ரூ.30 ஆயிரம் தருவதாக பேசப்பட்டது. இதனையடுத்து ரூ.19 ஆயிரம் பணத்தை கமலா கொடுத்துள்ளார்.

மீதித் தொகையை கேட்டு அடிக்கடி வெற்றிவேல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் கமலா புகார் அளித்தார்.அவர்களது அறிவுரை படி ரூ.10 ஆயிரம் பணத்தை கமலா கொடுத்தார். அதை வி.ஏ.ஒ வெற்றிவேல் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான போலீசார் வெற்றிவேலிடம் தீவிர விசாரணை நடத்தினர். கைதான வி.ஏ.ஓ வெற்றிவேல் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா அஞ்சூர் அடுத்த குழந்தைபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல்.. நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்…