Mon. Nov 25th, 2024

சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று உரையாற்றினார்..அதன் விவரம் இதோ…

நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா…
அண்ணாவின் தொடர்ச்சி கலைஞர்… கலைஞரின் தொடர்ச்சி நான்…
நான் அண்ணாவின் அரசியல் வாரிசு…
கலைஞரின் கொள்கை வாரிசு…

ஐந்தாண்டு ஆட்சி செய்யும் அரசு, கொள்கை திட்டங்கள் அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது.

ஆளுநர் உரை முன்னோட்டம்தான் அதாவது ஆளுநர் உரை டிரெய்லர் தான். முழு நீள திரைப்படத்தை திரையில் காண்பர் என்பது போல, மேற்கொண்டு வரும் பயணத்தில் சவால்கள், அதை சந்திக்கும் சவால்கள் அனைத்தும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும்.

எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது முந்தைய அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்படும். அதுபோலவே, மீத்தேன், நியூட்ரினோ உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளும் திரும்ப பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இதேபோல், கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளும் வாபஸ் பெறப்படும்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றைய சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசும் போது குறிப்பிட்டார்.