பொதுமக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்..
ஊரடங்கை கடைபிடிக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டிய கடமை மக்களுக்கு உள்ளது.
கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்பு தான் காரணம்.
டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும்:
போலி மது, கள்ள மது தமிழ்நாட்டை சீரழித்துவிடக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது.
டாஸ்மாக் கடைகள் முழுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றி இயங்கும்.
காவல்துறை கண்காணிப்பு இல்லாமலேயே மக்கள் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ள வேண்டும்.
முழு ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் நடந்துகொள்ள வேண்டும்-
பொதுப்போக்குவரத்து விரைவில் இயக்கப்படவேண்டும்; பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும்:
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்..