தமிழக சட்டப்பேரவை வரும் 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. அன்றைய தினம் ஆளுநர் உரையாற்றுவார்.
திமுக ஆட்சி அமைந்தவுடன் ஆளுநர் உரையுடன் கூடும் முதல் கூட்டத் தொடர் என்பதால், தேர்தலின்போது திமுக சார்பில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் இதில் இடம் பெறும்.
மேலும், புதிய அறிவிப்புகளும் ஆளுநர் உரையில் இடம் பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல்நாள் ஆளுநர் உரையாற்றிய பின்பு அன்றைய தினம் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்படும். பின்னர், சட்டமன்ற அலுவல்
ஆய்வுக்குழு கூட்டத்தை கூட்டி, எத்தனை நாட்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடரை நீடிப்பது என்பது குறித்து சட்டப்பேரவைத் தலைவர் முடிவு செய்து அறிவிப்பார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு கூறியது
சட்டமன்ற கூட்டம் கலைவாணர் அரங்கத்தில்
நடைபெறும்.
எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும்
சமூக இடைவெளியை கடைப்பிடித்து சட்டமன்ற கூட்டம் நடைபெறும்
சட்டமன்ற கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிந்த பின் அறிவிக்கப்படும்.
இவ்வாறு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தப் பிறகு நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரில் காரசாரமான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.