Sun. Nov 24th, 2024

ஜூன் 14 ஆம் தேதியன்று டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க திட்டம்….

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் பெயரை, ஒரு கோடிக்கு மேலான மக்கள் நித்தம் நித்தம் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் திருநாமத்தின் உச்சரிப்பை காட்டிலும் , அதிக ஒலியை எழுப்பிக் கொண்டிருக்கும் டாஸ்மாக்கில் அதிரடி மாற்றங்கள் அடுத்தடுத்து நிகழப் போகிறது என்ற தகவல், குடிமகன்களுக்கு இனிப்பான செய்தியாக இருக்கலாம்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்கு அதிகளவு வருமானத்தைத் ஈட்டி தரும் அரசு மதுபானக் கடைகளை கண்காணிக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் மாவட்ட மேலாளர்கள் (District Manger). தமிழக அரசின் வருவாய் துறையில் பணியாற்றி வருபவர்கள்தான் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றாலும், முந்தைய அதிமுக ஆட்சியில், (2003) அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா, எம்.பி.ஏ., பட்டம் படித்த பட்டதாரிகளை தற்காலிக பணி அடிப்படையில் மாவட்ட மேலாளர்கள் பணியில் நியமித்தார்.

டாஸ்மாக் விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்…

இந்த பணியில் நியமிக்கப்பட்ட பெரும்பான்மையான பட்டதாரிகள், முழுக்க, முழுக்க மன்னார்குடி கூட்டத்தின் பரிந்துரை மூலமே தேர்வானவர்கள். இன்றைய நிலையில், தமிழகத்தில் 32 பேர் மாவட்ட மேலாளர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 40 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மாதச்சம்பளம் பெற்று வருகிறார்கள். வெறும் 40 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் 10, 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் அளவுக்கு அத்தனை பேரும் முட்டாள்களாக என்றால், அதுதான் இல்லை. சம்பளத்தை தவிர, கிம்பளமாக மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் முறைகேடாக ஈட்டும் அட்சய பாத்திரமாக டாஸ்மாக் இருப்பதால், மாவட்ட மேலாளர் பதவியை கெட்டியாக பிடித்துக் கொண்டார்கள்.

அதிமுக ஆட்சியைப் போல திமுக ஆட்சியிலும் டோக்கன் சிஸ்டத்தை அமல்படுத்த திட்டம்

டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் மதுபான விற்பனைக்கு எதிராக, பெருமளவில் கூறப்படும் குற்றச்சாட்டு என்னவென்றால், ஒவ்வொரு மதுபான பாட்டிலுக்கும் விற்பனை விலையை விட கூடுதலாக ரூ.5, ரூ.10, ரூ.15., ரூ.20 என்ற விகிதத்தில் அதிகமாக பணம் வசூலிப்பது என்பதுதான். இப்படிபட்ட புகார்கள், குறிப்பிட்ட ஒரு கடைக்கு எதிராக அதிகளவில் வரும் போது மாவட்ட மேலாளர்கள் அதிரடியாக அந்த கடையில் ஆய்வு நடத்துவார்கள். அப்போது விற்பனைத் தொகைக்கு கூடுதலாக பணம் இருந்தால், அதை கைப்பற்றுவதுடன், அந்த மதுபானக் கடையின் விற்பனையாளர், மேற்பார்வையாளர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். மீண்டும் அந்த பணியாளர்கள் வேலையில் சேர்வது என்பது எளிதான காரியம் அல்ல.

டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறப்பதற்கு முன்பாக சரக்கு இருப்புகளை சரி பார்க்க தனிப்படை அமைத்து சோதனை செய்ய முடிவு…..

பொது முடக்கத்திற்கு முன்பாக வரை இந்த முறைகேடுகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வந்த நிலையில், அந்த கடைகளில் பணியாற்று வரும் ஊழியர்களில் மனசாட்சிக்கு பயந்த பலர், மாவட்ட மேலாளர்களின் வற்புறுத்தலால்தான், (குறிப்பாக எம்.பி.ஏ., பட்டதாரிகளான மாவட்ட மேலாளர்களின் பணத்தாசை காரணமாகதான்), மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதாக வாக்குமூலங்கள் அளிக்கின்றனர்.

ஐஏஎஸ் அதிகாரி எல்.சுப்பிரமணியன்….

இப்படி பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த முறைகேடுகளை களைய, கடந்த வாரத்தில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி எல். சுப்பிரமணியன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மன்னார்குடி கூட்டத்தால் நியமனம் செய்யப்பட்ட இந்த மாவட்ட மேலாளர்களின் ஊழல் விவகாரங்கள், முந்தைய திமுக ஆட்சியின் போது புயலை கிளப்பியபோது, அதில் 17 பேரை தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் அலுவலகப் பணிகளை கவனிப்பதற்காக பணியிட மாற்றம் செய்தார்கள். இருந்தாலும், மாவட்டங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கும் எஞ்சிய மாவட்ட மேலாளர்கள், முறைகேடு விவகாரத்தில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஊரடங்கு காலத்தில், டாஸ்மாக் கடைகளை ஒருநாள் விட்டு ஒருநாள் செல்போன் மூலம் புகைப்படம் எடுத்து டாஸ்மாக் அலுவலகத்திற்கு அனுப்ப உத்தரவு….

தற்காலிக பணி அடிப்படையில் பணிபுரிந்து வரும் எம்.பி.ஏ., பட்டதாரிகளான மாவட்ட மேலாளர்களுக்கு, பணி பாதுகாப்பு இல்லை என்பதால்தான், மதுபானக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை தூண்டிவிட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய சொல்லி, அதில் கிடைக்கும் பணத்தை கப்பமாக, மாதந்தோறும் ஒவ்வொரு கடைகளில் இருந்தும் பல ஆயிரம் ரூபாயை வசூலித்து வருகிறார்கள்.

கடந்த 17 ஆண்டுகளில் இப்படி முறைகேடாக வசூலித்த பணம் மட்டும் பல கோடி ரூபாக்கு மேல் இருக்கும். மதுபானம் விற்பதே பாவச் செயல் என்று கூறும் காலத்தில், அந்த பாவத்திற்கு மேல் பலமடங்கு பாவத்தைச் சேர்க்கும் காரியங்களில் துணிந்தே செயல்பட்டுக் கொண்டிருக்கும் தற்காலிக மண்டல மேலாளராக பணியாற்றி வருபவர்களை முதற்கட்டமாக பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கும் யோசனையை, டாஸ்மாக் துறைக்கு அமைச்சரான செந்தில்பாலாஜியின் கவனத்திற்கு, ஆதாரங்களோடு எடுத்துச் செல்லும் பணியில் தீவிரமாக இருக்கிறார் எல். சுப்பிரமணியன் ஐஏஎஸ் என்கிறார்கள், டாஸ்மாக்கில் பணியாற்றி வரும் அலுவலக அதிகாரிகள்.

One thought on “டாஸ்மாக் முறைகேடுகளை தடுக்க அதிரடி நடவடிக்கை.. சுப்பிரமணியன் ஐஏஎஸ் ஆட்டம் ஆரம்பம்… மன்னார்குடி நியமனங்களுக்கு விரைவில் கல்தா… குடிமகன்களின் கண்ணீரை துடைக்க நீளும் கரம்…”
  1. சூப்பர் சார் விரைவில் ஒரு நல்ல எதிர்காலத்தை நோக்கி உள்ள டாஸ்மாக் ஊழியர்கள்

Comments are closed.