Fri. May 3rd, 2024

முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், கடந்த இரண்டு வாரத்தில் 2வது முறையாக திருப்பூர் மாவட்டத்தில் கொரோனோ தடுப்புப்பணிகள் மற்றும் மருத்துவக் கட்டமைப்பு விரிவாக்கம்ஆகியவற்றை இன்று ஆய்வு செய்தார்.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தினார்.

கடந்த சில நாட்களாக சென்னையை காட்டிலும், கோவையில் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின், இன்று ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டது.

இன்று காலை 10:00 மணிக்கு ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஐ.ஆர்.டி., மருத்துவ கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார்.

பின், அங்கிருந்து திருப்பூர் சென்று குமரன் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இரண்டு மாவட்டங்களில் ஆய்வு முடித்துவிட்டு மதியம் 12:30 மணியளவில், முதல்வர் ஸ்டாலின் கோவை வந்தார்.

கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வர மண்டலத்துக்கு 10 வீதம் 50 கார்கள் இயக்கப்படும் திட்டத்தை ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

பின்னர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், பிபிஇ கிட் உடை அணிந்து நோயாளிகளை சந்தித்து சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், உணவுத்துறை அமைச்சர் சக்கரவாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு முடித்துக் கொண்டு கோவை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனோ தொற்றாளர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக முழு பாதுகாப்பு உடையை அணிந்து கொண்டு சென்று கொரேனோ தொற்றுக்கு உரிய சிறப்பு சிகிச்சை மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.