Fri. Nov 22nd, 2024

மத்திய அரசு பிறப்பித்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற போராட்டம் 6 மாதங்களை கடந்துவிட்டது. நாடு முழுவதும் விவசாயிகளிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையிலும் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறாமல் மத்திய அரசு பிடிவாதமாக இருந்து வருவதால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை கண்டித்து இன்றைக்கு டெல்லியில் விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள தமிழக அரசு, அவர்களின் கோரிக்கையினை ஏற்று 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் இதோ….