தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று அதிகாலை மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். அதனையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் இரண்டொரு நாள் சிகிச்சைக்குப் பிறகு விஜயகாந்த் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக இளைஞரணி செயலாளரும், அவரின் உறவினருமான சுதீஷ் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயகாந்த், விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், அவரது ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சிறப்பு பிரார்த்தனையிலும் அவரது ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், நடிகர் விஜயகாந்த் பூரண குணம் பெற்று மீணடும் அரசியல் களத்திற்கு திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.