Wed. Nov 27th, 2024

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துதல் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளிடம் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவச் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

சளி காய்ச்சல் தலைவலி இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறவேண்டும் சில மருந்து விற்பனை கடைகளில் சளி காய்ச்சல் தலைவலி உள்ளவர்களுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர் இது போன்று சட்டவிரோதமாக செயல்படும் மருந்து விற்பனை கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால் நோயின் தாக்கம் குறையும்.

இவ்வாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.