Sat. Nov 23rd, 2024

தூத்துக்குடி எம்.பி.யும் திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி கருணாநிதி, இரண்டு நாட்களாக தூத்துக்குடியில் முகாமிட்டு, கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம்களை ஆய்வு செய்தார்.

மாப்பிள்ளையூரணியில் கொரோனா தடுப்பூசி முகாமை அவர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் மற்றும் மருத்துவ நிபுணர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நேற்றைய தினம் ஓட்டப்பிடாரம் ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக, கயத்தாறு நியாய விலைக் கடையில் தமிழக முதல்வர் அறிவித்த கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையான 2000 ரூபாயை மக்களுக்கு கனிமொழி எம்.பி. வழங்கினார். இந்நிகழ்வில், அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.