Mon. Nov 25th, 2024

கொரோனோ தொற்றின் முதல் அலை பரவியது போது கற்றுக் கொண்ட படிப்பினையை அரசாங்கங்கள், நிர்வாக அமைப்புகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து கடைப்பிடிக்காததே, இரண்டாம் அலையின் தாக்கம் மற்றும் உயிரிழப்பு அதிகரிப்பிற்கும் முக்கிய காரணம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் குற்றம்சாட்டியுள்ளார்.

அனுபவமிக்க மருத்துவர்கள், அறிவியலாளர்கள் வலியுறுத்திய நெறிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்காததாலேயே இன்றைக்கு இந்தியா, இந்தளவுக்கான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்படிபட்ட நேரத்தில் கொரோனோவின் 3 வது அலையும் தாக்கக் கூடும் என்ற ஒரு தகவலும் வெளியாகியிருக்கிறது. அதை கண்டு மக்கள் பயப்பட வேண்டுமா?அல்லது அதனை எதிர்த்து போராடி வெற்றிப் பெற வேண்டுமா ? என இரண்டு கேள்விகள் நம்முன் நிற்கிறது. கொரோனோ தொற்றை எதிர்த்து போராடுபவர்களிடம் நேர்மறையான தகவல்களை கொண்டு செல்ல வேண்டும். மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் தகவல்களை அதிகமாக பரப்புரையாக்க வேண்டும்.

தற்போதைய அனுபவங்களிலிருந்து கொரோனோ தொற்றை விரட்டும் வழிமுறைகளை கற்றுக்கொள்வதன் மூலம் மக்களும் அரசாங்கமும், 3வது அலையை எதிர்கொள்ளவும் தயாராக வேண்டும். இன்றைய தேதியில் இந்தியா எதிர்கொள்ளும் சிரமங்களில் இருந்து விடுபட்டு, நடப்பு நிகழ்வுகளில் நடைபெற்ற தவறுகளிலிருந்து முழுமையான பாடத்தை கற்றுக் கொண்டால், 3 வது அலையை எதிர்கொள்ளும் துணிச்சலும், நம்பிக்கையும் இந்தியா மக்களுக்கு கிடைத்து விடும். 

இவ்வாறு மோகன் பகவத் கூறியுள்ளார்.