Sat. Nov 23rd, 2024

தமிழகத்தில் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளுக்கு தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நிவாரண நிதியை ஆர்வமுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி வருகின்றனர்.

கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

Hatsun Agro Products Ltd நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் ஆர்.ஜி.சந்திரமோகன் முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 3 கோடி ரூபாய் வழங்கினார்.

SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இணை வேந்தர் முனைவர் பி. சத்தியநாராயணன், தலைவர்கள் சிவகுமார், நிரஞ்சன் ஆகியோர் கொரோனா தடுப்பு பணிகளுக்காக, 1 கோடியே 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 இலட்சம் வழங்கினார்.

இந்த வரிசையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனும் ரூ 5000 ஐ கொரோனா நிதியாக வழங்கி, தமிழக மக்களை நெகிழ வைத்துள்ளார்.

சிறையில் தான் வேலை செய்த ஊதியத்தை கொரோனா நிதிக்காக வழங்கியுள்ளதாக ரவிச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே ஹார்வார்டு தமிழ் இருக்கைக்கு ரூ 20 ஆயிரம், கஜா புயலுக்கு ரூ 5000 கொடுத்துள்ளார்