முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதன் நோக்கமே, பொதுமக்கள் வீட்டை வெளியே சுற்றக் கூடாது என்பதுதான்.அரசின் உத்தரவை அனைவரும் கடைப்பிடித்து, கொரோனோ தொற்று பரவாமல் தடுக்க முன் வர வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளர்.
இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு இதோ…
முழு ஊரடங்கு என்றால் வீட்டை விட்டு வெளியில் வராதே என்பது தான் அர்த்தம். மகிழுந்து, இரு சக்கர ஊர்திகளின் சாவிகளை பெற்றோரிடம் கொடுத்து மறைத்து வைக்கச் சொல்லுங்கள். ஊரடங்கின் பொருளை இன்னும் புரிந்து கொள்ளாமல் ஊர் சுற்றி வருவோருக்கான அறிவுரை இது!
வெளியே சுற்றாமல் வீட்டில் முடங்கியிருப்பதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து நீங்கள் உங்களையும், குடும்பத்தினரையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தொற்று இருந்தால் வெளியில் சுற்றி அதை பரப்பாததன் மூலம் மற்றவர்களைக் காப்பாற்றுங்கள்!