இந்தியாவில் அவரச நிலையை பிரகடனம் செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. .
இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்து ஆக்ஸிஜன், மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் & மருத்துவமனைகள் ஆகியவற்றை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர உத்தரவிடக் கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணையின் போது, நீதிபதிகள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும்…..
தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 519 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
முதல்வரின் கோரிக்கையை ஏற்று கடந்த 8ம் தேதி ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெ.டன் ஆக மத்திய அரசு உயர்த்திய நிலையில் தற்போது மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
DRDO மூலம் ஆக்சிஜன் உற்பத்தி வசதியை ஏற்படுத்தக் கோரி மாநில அரசு PM Cares அமைப்புக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் மத்திய அரசு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதனை ஏற்று, உடனடியாக விண்ணப்பிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும்; மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரைகளை வழங்கியுள்ளது.
கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நன்றி தெரிவித்தனர்.