தமிழகத்தில் கொரோனோ தொற்று பரவல் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனோ தொற்றால் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தினசரி பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட எந்த மருந்தும் தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதுதொடர்பாக, நானை முதல்வராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
PR-06052021தமிழகத்தில் மேலும் 24,878பேருக்கு கொரோனா: 195பேர் உயிரிழப்பு.
தமிழகத்தில் மேலும் 24,898 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொத்த பாதிப்பு 12,97,500 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 21,546 பேர் குணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் மொத்தம் 11,51,058 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 195 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 14,974 ஆக உயர்ந்துள்ளது.
அரசு மருத்துவமனையில் 114 பேரும், தனியார் மருத்துவமனையில் 81 பேரும் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 6678 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மொத்தம் 370596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.