கொரோனோ தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து, இரண்டாவது நாளாக இன்றும் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், நோய் பரவாமல் தடுத்தல் – தொற்றுக்குள்ளானவர்களைக் காப்பாற்றுதல் ஆகிய இரு குறிக்கோள்களைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.புதிய கட்டுப்பாடுகளை அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் எனக் கருதாமல் மக்கள் தங்களின் கட்டுப்பாடுகளாக நினைக்க வேண்டும். அரசும் மக்களும் இணைந்து கொரோனோ தொற்றை வெல்வோம் என்று பொதுமக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.