தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றிப் பெறுவது உறுதியானதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் முதல் நபராக கவிஞர் வைரமுத்து சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து அகில இந்திய தலைவர்களில், முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்து செய்தி அனுப்பினார்.
மாலை 4 மணியளல் 153 இடங்களில் திமுக கூட்டணி முன்னணியில் இருக்கிறது என்பதை உறுதியானவுடன் பாஜக மூத்த தலைவரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பாராட்டுக்கள் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிப் பெற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.
Congratulations to DMK leader, Thiru @mkstalin on his party’s victory in Tamil Nadu assembly elections. I extend my best wishes to him.
— Rajnath Singh (मोदी का परिवार) (@rajnathsingh) May 2, 2021
இதேபோல், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள முறையே கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சித் தலைவர்களுக்கும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.