தகவல்: மூத்த ஊடகவியலாளர் எம்.வி.ராஜதுரை
நாடு முழுவதும் கெரோனா 2 ஆம் அலை நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் மாவட்டம் தோறும் சித்தகூட்டு மருத்துவமையம் திறக்க வேண்டும் என தமிழ் எழுச்சிப் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ் எழுச்சிப் பேரவை சார்பில் அதன் செயலாளர் முனைவர் இறையரசன் இன்று
விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
உலகம் முழுதும் தமிழரின் ஆளுமைத் திறம், கல்வித்திறம், நேர்மை அறம் வெற்றிபெற்று வருகிறது. தமிழ் மருத்துவம் டெங்கு, கரோனை தொற்றுநோய் போக்குவதில் சாதித்துள்ளது. கூட்டு மருத்துவம் உயிர்கொல்லி (எய்ட்ஸ்) நோய்களில் கூட வெற்றிபெறும் என மருத்துவர் தெய்வநாயகம் நிறுவியுள்ளார்.
தமிழக மருத்துவர்கள்….
இன்றைக்குத் தொற்று நோய் பரவல் காலத்தில் நோய்த்தடுப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பது சித்த மருத்துவமும் மூலிகைகளும் ஆகும்.
கரோனா தொற்று பரவிய முதற்கட்டத்தில் சென்னையில் சித்த மருத்துவர் வீரபாபு தலைமையில் அமைக்கப்பட்ட மையம் ஓர் உயிரும் இழப்பின்றி மருத்துவ வெற்றிபெற்றது.
அலோபதி மருத்துவத்திலோ பிற மருத்துவ முறைகளிலோ இதுவரை
முற்றிலும் நோய் போக்கும்/ தடுக்கும் மருந்துகளோ ஊசிகளோ கண்டுபிடிக்கப் படவில்லை.
முன்பு டெங்கு காய்ச்சலுக்கும் இவ்வாறு மருந்துகள் இல்லாத பொழுது சித்த மருத்துவம் கூறிய பப்பாளி இலைச்சாறும் நிலவேம்பு கியாழமும் (கசாயமும்) நோயைப் போக்கப் பயன்பட்டன; அலோபதி மருத்துவர்களும் அதனை ஏற்றனர்.
அதே நிலையில்தான் இப்போது கரோனா தொற்று நோய் பரவி வருகிற பொழுதும் கபசுரக் குடி நீரும் துளசி சுக்கு மிளகு ஆடாதோடை முதலியன கலந்த கசாயமும் மிகப்பெரிய பயன் தந்து வருகின்றன.
எனவே சித்த/ ஆயுள்வேத மருத்துவத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டியதும் பின்பற்ற வேண்டியது பரப்ப வேண்டியதும் நம் மருத்துவர்களுடைய தமிழக அரசினுடைய தமிழ் மக்களினுடைய கடமை ஆகும். பதிவுபெற்ற சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவர்களும் மருத்துவக் கல்லூரிகளும் மக்கள் நலம் நாடும் சான்றோர்களும் உடனடியாக இக் கருத்தை முன்வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுதும் மாவட்டம்தோறும் சித்த ஆயுள்வேத முறைமையங்களில்
நாட்டு மருத்துவ கூட்டு மருத்துவம் பின்பற்ற அரசு ஆவன செய்ய வேண்டும்.
தமிழக ஆங்கில முறை மருத்துவ குழுவினரும் இதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
சென்னையில் முன் போல் கரோனா நோய் போக்கச் சித்த மருத்துவ கூட்டு மருத்துவ மையம் விரைவில் திறக்கப்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் எழுச்சிப் பேரவை
நிர்வாகிகள்:
- முனைவர் பொற்கோ, மதிப்புறு நெறியாளர்.
- சரவணராசா பொன்னுசாமி, புரவலர்.
- தஞ்சை கோ.கண்ணன், தலைவர்.
- முனைவர் சித்த மருத்துவர்
- ஆனைவாரி ஆனந்தன்,
- துணைத் தலைவர்.
முனைவர்
பா. இறையரசன், செயலாளர்.
திரைப்பட நடிகர் இயக்குநர் கவிஞர் யார் கண்ணன்,
கலைத் தொடர்பாளர் .
இயற்கை மருத்துவர் மரிய பெல்சின்,
திரைக்கவி வடிவரசு,
ஊடகத்
தொடர்பாளர்கள் .
குவைத்துக் கவிஞர் வித்யாசாகர், பன்னாட்டுத் தொடர்பாளர்.
குவைத்து இரா. ஆறுமுகம் ( வடலூர்),பொருளாளர்
த க. இளங்கோவன், தணிக்கையாளர்.
தகவல் தொடர்புக்கு கைபேசி எண்கள் இதோ….
9840416727,
780 78 76 527.