Sun. Nov 24th, 2024

தூத்துக்குடி மக்களின் போராட்டத்தினால் கடந்த பல ஆண்டுகளாக மூடிக்கிறது ஸ்டெர்லைட் ஆலை. நாடு முழுவதும் கொரோனோ சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மூடிக் கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் தயாரிப்பதற்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில், தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது.

மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து உரிய பதில் கிடைக்காததால், ஸ்டெர்லைட் நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. அதில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்புக்கான அனைத்து வசதிகளும் இருப்பதால், நாட்டில் இப்போது ஆக்சிஜனுக்கு மிகவும் தட்டுப்பாடு நிலவுவதாலும், மூடிக்கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நாளைக்கு வரவுள்ள நிலையில், மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மத்திய அரசின் முடிவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:

நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என சுகாதாரத்துறை விளக்கியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து பரவிய நச்சுக்காற்றால், தூத்துக்குடியில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த ஆலையை மீண்டும் இயக்க வேண்டிய தேவை இல்லை.

அத்தகைய முயற்சிகளுக்கு, தமிழக அரசு இடம் தரக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்,