Sun. Nov 24th, 2024

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புகளே இல்லை

மின்னணு வாக்குபதிவு இயந்திரம் என்பது கால்குலேட்டர் போன்றது: எந்த சிக்னல் கொண்டும் அதை இயக்க முடியாது.

மேல் முறையீடு

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றதாக திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கு.

சட்டமன்ற செயலாளர், உரிமைக்குழு தாக்கல் செய்த மனுவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவு.

சித்திரை விழா சிக்கல்…

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடத்த உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

கொரோனா பரவல் மிகத்தீவிரமாக பரவி வரும் சூழலில், கட்டுப்பாடுகள் மேலும் அதிகப்படுத்தப்படலாம் என நீதிமன்றம் கருத்து…

வெயில் அதிகரிக்கும்

தமிழகத்தில் 22மாவட்டங்களில் நாளை முதல் வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 22மாவட்டங்களில் நாளை முதல் 2 முதல் 3டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளுக்கான நேரம் நாளை முதல் குறைப்பு

நாளை முதல் டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படும்.

டாஸ்மாக் கடைகளில் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானங்கள் விற்பனை.

டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு – 2 வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

ஒரே நேரத்தில் கடையின் உள்ளே 5 பேருக்கு மேல் இருக்கக் கூடாது என கட்டுப்பாடுகள்.

பிளஸ் 2 தேர்வுக்கு புதிய அட்டவணை

பிளஸ் 2 தேர்வு நடைபெறும் 15 நாட்களுக்கு முன்பாக அட்டவணை அறிவிக்கப்படும் என தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மே 5ஆம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கொரோனோ பரவுதல் காரணமாக ஒத்திவைக்கப் பட்டுள்ளன. இதனையடுத்து, புதிய அட்டவணை தேர்வு தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படவுள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்.

நடிகர் விவேக் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தடுப்பூசி விவகாரம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான், தமிழக அரசை குறை சொல்லி பேட்டியளித்தார். இந்த பேட்டி, பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தக் கூடியவை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார். மேலு, நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்தநிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சார்பில் முன்ஜாமீன் கோரும் மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “தடுப்பூசியை கட்டாயப்படுத்தக்கூடாது என்று தான் சொன்னதாக அவர் குறிப்பிட்டுள்ளார்…