Sun. Nov 24th, 2024

கொரோனா ஊடரங்கில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு

12ஆம் வகுப்பு செயல்முறை தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள்.

இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல்.

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு
ஊரடங்கு அறிவிப்பு.

பால் விநியோகம், மருந்தகம் உள்ளிட்ட அத்திவாசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி.

ஆட்டோ, கால்டாக்சி, பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு தடை.

ரயில் சேவை தொடரும்

தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் 50 சதவிகிதம் பேர் வீட்டிலிருந்தே பணிபுரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் செல்ல தடை.

மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைக்கும் செல்ல அனுமதி இல்லை

முழு ஊராடங்கில் உணவகம் பார்சல் வாங்க மட்டும் செயல்படும்.

தங்கும் விடுதிகள் கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்பட அனுமதி.

முழு ஊரடங்கு நாட்களில் உணவகங்கள் காலை 6 -10, நண்பகல் 12- 3, மாலை 6 – 9 மணி வரை செயல்பட அனுமதி, ஞாயிற்றுக்கிழமைகளில் பார்சல் மட்டும் வழங்கப்படும்.

கல்லூரி & பல்கலைக் கழக தேர்வுகள் இணைய வழியில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்

கல்லூரி & பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணையவழி வகுப்பு நடத்த அறிவுறுத்தல்

ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும்,

தனியார் நிறுவன இரவு காவல் பணியில் ஈடுபடுவோர் வீட்டிலிருந்து பணி இடத்திற்கு சென்று திரும்ப அனுமதி

விதிமுறைகளை பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்