Sun. Nov 24th, 2024

மாபெரும் கலைஞனே…மனம் உடைந்துப்போனேன்..பேரிழப்பு..என்ன நடக்கிறதோ ? என்று அதிர்ச்சியுடனே இயக்குனர் எஸ்.ஜெ. சூர்யா, இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் மயில்சாமியும், நடிகர் விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மனிதநேயமிக்க மனிதர். இளகிய மனம் படைத்தவர், வெளியுலகிற்கு தெரியாமல் நற்காரியங்களை ஏராளமாக செய்து வந்தவர். மரம் வளர்ப்பு, சுற்றுச்சூழலில் அதிக அக்கறை செலுத்தியவர் என்று மயில்சாமி தெரிவித்துள்ளார்.

டாக்டர் அப்துல் கலாம் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர் நடிகர் விவேக்.,,,,

1987-ம் ஆண்டில் பாலச்சந்தர் இயக்கத்தில் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகர் விவேக் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையுடன் சேர்ந்து சமூகக் கருத்துக்களையும் தொடர்ந்து பேசிவந்தவர்.

அதனால் ‘சின்னக் கலைவானர்’ என்ற பெயரையும் பெற்றார்.

2000-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டில் மட்டும் 50-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விவேக்.

இதுவரை 2020-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2009-ம் ஆண்டு பத்ப ஸ்ரீ விருதைப் பெற்றவர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்த அவர், மாணவர்களைத் திரட்டி ஒரு கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு சமூகப் பணியாற்றி வந்தார்.

சமூக சீர்திருத்த கருத்துகளை கூறி நடித்ததால் சின்னக் கலைவாணர் என்ற பட்டமும் நடிகர் விவேக்கு உண்டு.

5 முறை தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை பெற்றுள்ளார் நடிகர் விவேக்.

ரன், சாமி, பேரழகன் படங்களுக்கு பிலிம்பேர் விருது பெற்றுள்ளார் விவேக்.