Sun. Nov 24th, 2024

தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் தேவை என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

தமிழகத்துக்கு கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்டு, 5 லட்சம் கோவாக்சின் வழங்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதை அரசு தீவிரப்படுத்தி வரும் சூழலில் கூடுதல் மருந்து அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.

தடுப்பூசி அவசியம்..

தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு, சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 சதவீதத்தினர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

எனவே, தடுப்பூசி இலக்கை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பதால், 45 மேற்பட்டவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான நடவடிக்கைகளில் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தனது உத்தரவில் அறிவுறுத்தியுள்ளார். .