Mon. Nov 25th, 2024

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெருமளவிலும் அசம்பாவிதம் இன்றி நடைபெற்றதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பாராட்டு தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் சிறப்பாக போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒன்றிரண்டு இடங்களில் சிறிய அளவிலான வன்முறைச் சம்பவங்களைத் தவிர, பொதுவாகவே அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

சென்னையில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்திலேயே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையர் சென்னை மாநகராட்சி ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியவர் :-

வேட்பாளர்களுடன் உடன் இருக்கும் நபர்கள் பூத் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை

பூத்துகளில் செல்போன்கள் பயன்படுத்த கூடாது

வேட்பாளர்கள் ஒரு வாகனத்தை பயன்படுத்தலாம்

வேட்பாளரின் முகவர்கள் ஒரு வாகனம்

கூடுதலாக வேட்பாளர்களின் பணியாளர்கள் அல்லது கட்சி பணியாளர்கள்

04423452437, 9498181239 இந்த நம்பர்களில் தொடர்பு கொண்டு மக்கள் புகார் தெரிவிக்கலாம்

தேர்தல் சம்மந்தமான புகார் ஏதேனும் இருந்தால் புகார் தெரிவிக்கலாம்

வாக்குச்சாவடி அமைந்துள்ள இடத்திலிருந்து 100 மீட்டருக்குள் வாக்கு சேகரிக்க அனுமதி இல்லை

இதை தவிர வேறு யாரும் வாகனம் தேர்தல் அன்று பயன்படுத்த கூடாது

9 புகார்கள் பணம் கொடுப்பதாக எடுக்கப்பட்டுள்ளது

18 சின்ன சின்ன சண்டைகள் மீது புகார் எடுக்கப்பட்டு உள்ளது

வாக்குச்சாவடி அமைந்துள்ள இடத்திலிருந்து 200 மீட்டருக்குள் கட்சி தேர்தல் அலுவலகங்கள் அனுமதி இல்லை

இப்பவரை சென்னைக்கு செட்டில் 44.41கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளோம்

லொயோலா கல்லூரி,ராணி மேரிஸ் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மூன்று இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைப்பெறும்

7 மணி க்கு மேல் வெளி மாவட்டம் அல்லது மாநிலங்களிலிருந்து பிரச்சாரம் செய்ய வந்தவர்கள் வெளியே செல்ல வேண்டும்

3000 மேல் கேமராக்கள் வாக்குசேகரிக்கும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளது

மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன இதில் பங்குகளை விற்பது இல்லை இங்கே நகை வாங்கிக்கொண்டு கொடுப்பதோ செய்தால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.. இவ்வாறு மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்திருந்தார்.

இதேபோன்ற அறிவுரைகளை மாநிலம் முழுவதும் அனைத்து தரப்பினரும் பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை தலைவர் திரிபாதியும் அறிவுறுத்தியிருந்தார்.

மேலும், சென்னையில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசார் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்கும் குடிநீர், உணவுப் பொருள்களை நேரில் வழங்கி, அனைத்து போலீசாரையும் காவல் ஆணையர் மகேஷ்குமார் உற்சாகப்படுத்தினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், வாகன சோதனைகளும் சிறப்பாக நடைபெற்றதுடன், வாக்குப்பதிவுக்கு வந்த முதியோர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று அமர வைத்து, வாக்களிக்க உதவியது போன்ற மனிதாபிமான செயல்களையும் கண்டு பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.

பொதுமக்களின் நண்பன் காவல்துறை என்பதை உண்மையாகவே உணர வைத்த சென்னை போலீசாருக்கு, அனைத்து தரப்பு மக்களும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

இதேபோல, மாநிலம் முழுவதும் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினரின் இரவு பகல் பாராமல் மேற்கொண்ட முனைப்பான கண்காணிப்பு பணிக்கு, மிகப் பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. தமிழகம் எப்போதுமே அமைதிப் பூங்கா என்பதை 2021 சட்டமன்றத் தேர்தலும் நிரூபித்திருக்கிறது. இதனையொட்டிதான், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.