தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை சிறிய அளவிலான அசம்பாவிதங்களை தவிர்த்து, பொதுவாகவே அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 5 மணியரை 63.6 சதவிகித வாக்குகள் பதிவு வாகியுள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். அதிகபட்சமாக நாமக்கல்லில் 70.79 சதவிகித வாக்குகளும், குறைந்தபட்சமாக திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் 50.09 சதவிகிதமும் வாக்குப்பதிவு ஆகியுள்ளது.
இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்திலேயே திரையுலக நட்சத்திரங்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட இதர கட்சித் தலைவர்களும், அவரவர் சொந்த ஊரில் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
கொரோனோ தொற்று அச்சம் உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் சிறப்பாக செய்திருந்தது. கொரோனோ தொற்று பாதிப்புக்கு ஆளானவர்கள், குணமானவர்கள், சிறப்பு சிகிச்சைப் பெற்றுவர்கள் உள்ளிட்டோரும் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணையம் சிறப்ப வசதி ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அவர்களுக்கு என சிறப்பு நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்படி, கொரோனோ பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வரும் திமுக எம்.பி.யும் மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி, கொரோனோ தொற்று பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் முழு பாதுகாப்பு கவச உடையை அணிந்து வந்து வாக்களித்தார்.