தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி யாருக்கு என்று தொடர்ந்து வெளியாகி வரும் ஆங்கிலம் மற்றும் தமிழக ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள், பெரும்பான்மைக்கு மேலான தொகுதிகளில் திமுக வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், மு.க.ஸ்டாலினே முதல்வராக பதவியேற்பார் என்றும் ஆணித்தரமாக சொல்லி வருகின்றன.
இன்று காலை ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பும் திமுக.விற்கு அமோக வெற்றி கிடைக்கும் என்றே தகவல் தெரிவித்துள்ளது.
இதேபோல மற்றொரு கருத்துக் கணிப்பும் தேர்தல் முடிவுகள் திமுக.வுக்கே சாதகமாக அமையும் என்று தகவல் தெரிவித்தள்ளது.
T-Intelligence என்ற அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பை Fr. ஜெகத் கஸ்பர், திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது வெளியீட்டார்.
கருத்துக் கணிப்பு குறித்து ஜெகத் கஸ்பர் கூறியதாவது:
கடந்த 2006ம் ஆண்டு முதல் Goodwill Communications என்ற பெயரில் தேரதல் கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த நிறுவனம் T-Intelligence என்ற பெயரில் இயங்கி வருகிறது. நடைபெறவுள்ள 2021 சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக தமிழகம் தழுவி வகையில் 70 களப்பணியாளர்கள் , 10 ஒருங்கிணைப்பாளர்கள், 4 நிபுணர்களைக்கொண்டு , 8700 வாக்காளர்களிடம் நேர்காணல் செய்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில்,
திமுக கூட்டணி 167
அதிமுக கூட்டணி 51 (அல்லது அதற்கு மேலாக கூடுதலாக ஒன்றிரண்டு தொகுதிகள்..)
மநீம 1
அமமுக 1
பிற 14
கைப்பற்றும் என தெரியவந்துள்ளதாக ஜெகத் கஸ்பர் தெரிவித்தார்.
இதுவரை வெளிவந்துள்ள கருத்துக்கணிப்புகள் மூலம், திமுக.தான் ஆட்சி அமைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் லட்சியமான, தனது மறைவுக்குப் பிறகும் அதிமுக ஆட்சி 100 ஆண்டுகள் நீடிக்கும் என்பது, முதல்வர் பழனிசாமி உயிரைக் கொடுத்தாலும் நடக்காது என்பதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று வாழ்த்துக் போஸ்டர்களை வேண்டுமானால் அச்சடித்து வைத்துக் கொள்ளலாமே தவிர, அவர் ஒருபோதும் முதலமைச்சர் ஆக பதவியேற்க முடியாது என்ற மு.க.அழகிரியின் சாபமும், சபதமும் தேர்தலுக்கு முன்பாக தோல்வியை தழுவிவிட்டன என்பதை, இதுவரை வெளிவந்துள்ள கருத்துக் கணிப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.
எல்லோரும் போற பக்கம்தான் நாங்களும் போகனுமா என்ன… நாங்க புதுசா ஒரு ரூட் எடுக்கிறோம் என்று களத்தில் குதித்துள்ளது எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான காட்சி ஊடகங்களில் ஒன்றான புதுயுகம் தொலைக்காட்சி……இதையும் பார்த்து வைத்துக் கொள்வேமே…
இதையும் குறித்து வைத்துக் கொள்வோம்.. விட்டுவிட்டோம் என்றால் மே 2 ஆம் தேதி நினைவுக்கு வராது….