காவிரியின் குறுக்கே சட்டவிரோதமாக உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் நோக்கத்தோடு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ரூபாய் 9 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ள கர்நாடக சட்டமன்ற நடவடிக்கையை கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் அதன் தலைவர் பி ஆர் பாண்டியன் தலைமையில் நாளை மார்ச் 28-ல் கர்நாடகம் நுழைவோம் ஃமேகதாது அணை கட்டுமானப் பணியை தடுப்போம்.. என்ற முழக்கத்தோடு மேகதாட்டு பகுதியை முற்றுகையிடுவதற்காக தஞ்சாவூர் ராஜராஜ சோழன் நினைவிடத்தில் மாலை அணிவித்து 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாகனங்கள் மூலம் புறப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது..
மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு சட்டமன்றத்தில் 9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இச்செயல் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது i உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும் எனவே சட்டவிரோதமாக நிதி ஒதுக்கீடு செய்த கர்நாடக சட்டமன்றத்தை உடனடியாக தடை செய்ய மத்திய அரசு முன்வரவேண்டும் வேண்டும்.
மேகதாது அணை கட்டப்படுமேயானால் தமிழகத்திற்கு வரக்கூடிய உபரி நீரையும் முற்றிலும் தடுத்து காவிரி டெல்டா பாலைவனமாக மாறிவிடும்.சுமார் 30 மாவட்டங்களில் வாழக்கூடிய 5 கோடி மக்களுடைய குடிநீர் ஆதாரம் முற்றிலும் பறிபோகும்.25 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாலைவனமாக மாறும். அண்டை மாநில உறவுகள் சீர்குலையும்.
எனவே உடனடியாக அணை கட்டுமான பணியை கைவிட வேண்டும்.மறுக்கும் பட்சத்தில் மத்திய மோடிஅரசு அதனை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். இத்திட்டம் நிறைவேற்றுவதற்கு மோடி அரசு துணை போவதாக குற்றம் சாட்டுகிறேன். இல்லையேல் உடனடியாக மத்திய அரசாங்கம் தலையிட்டு தடுத்து நிறுத்த முன்வரவேண்டும். தமிழக தேர்தல் ஆணையம் இது குறித்து மத்திய அரசுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இதனை வலியுறுத்தும் விதமாக நாளை காலை 10 மணி அளவில் சத்தியமங்கலத்தில் இருந்து ஊர்வலமாகப்புறப்பட்டு மேகதாட்டு பகுதிக்கு முற்றுகையிட செல்ல உள்ளோம்.
இப்போராட்டம் அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகத்தில் தேர்தல் களத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பேரழிவு திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற உயரிய லட்சியத்தோடு விவசாயிகள் புறப்பட்டு உள்ளோம் என்றார்.
துவக்க நிகழ்ச்சியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர்
த.புண்ணியமூர்த்தி மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீதர், தஞ்சை மாவட்ட செயலாளர் எம் மணி, திருவாரூர் மாவட்ட தலைவர் எம் சுப்பையன், நாகை மாவட்ட துணை செயலாளர் திருமருகல் சேகர்,மயிலாடுதுறை மாவட்ட துணை செயலாளர் கொள்ளிடம் பன்னீர்செல்வம், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் மகேந்திரன், தஞ்சை மாவட்ட கழக தலைவர் திருப்பதி வாண்டையார் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.