அமைச்சர் வீரமணியின் சொத்து மதிப்பு 68,7 கோடி ரூபாய்…
2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது அமைச்சர் கே.சி.வீரமணி தனது சொத்து மதிப்பு (அசையும் மற்றும் அசையா சொத்து) 27.7 கோடி ரூபாய் என தெரிவித்திருந்தார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 68,7 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இந்த 5 ஆண்டில் அவரின் சொத்து மதிப்பு 148.3 சதவிகிதம் உயர்ந்து இருக்கிறது. 5 ஆண்டு வருமானமாக அவர் காட்டியது, எம்.எல்.ஏ., சம்பளம், வாடகை, விவசாயம் ஆகியவற்றின் மூலமாக கிடைத்தாக தெரிவத்துள்ளார்.
அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு ரூ.61.5 கோடி..
2016 ல் டாக்டர் விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு 9.08 கோடி ரூபாய். 2021 ல் அவரின் சொத்து மதிப்பு 61.5 கோடி ரூபாய். ( 576.6 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ) 5 ஆண்டுகளில் விஜயபாஸ்கர் 52 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்திருக்கிறார்.
குறைவாக வருவாய் ஈட்டிய 4 அமைச்சர்கள்
கடம்பூர் ராஜு, டி.ஜெயக்குமார், வி.எம்.ராஜலெட்சுமி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் 2016ல் ஒரு கோடி ரூபாய்க்கு குறைவாகதான் சொத்து இருப்பதாக கணக்கு காட்டியுள்ளனர். ஆனால், இந்த 5 ஆண்டுகளில், ஜெயக்குமாருக்கு 1.8 கோடி ரூபாயும், ராஜலெட்சுமிக்கு 2.66 கோடியாகவும், ஆர்.பி.உதயகுமாருக்கு 1,83 கோடியாகவும் சொத்து மதிப்பு கூடியிருக்கிறது. இந்த 5 ஆண்டுகளில் பெரிய அளவில் இவர்கள் வருமானம் ஈட்டவில்லை…
அமைச்சர் கே.பி. அன்பழகனின் சொத்து மதிப்பு 18.8 கோடி ரூபாய்
அமைச்சர் கே.பி. அன்பழகனின் சொத்து மதிப்பு 2016ல் 2.4 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால், இந்த 5 ஆண்டுகளில் அவரின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்து 18.8 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 2.5 கோடி ரூபாய் சம்பாதித்து இருக்கிறார் அமைச்சர் அன்பழகன்.இவ்வளவு கம்மியாகதான் சம்பாதித்து இருக்கிறாரா என்று வாசகர்கள் வருத்தப்படாதீர்கள். கணக்கில் காட்ட முடிந்த தொகை மட்டுமே…
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சொத்து மதிப்பு 14.9 கோடி ரூபாயாகவும், செல்லூர் ராஜுவின் சொத்து மதிப்பு 6.5 கோடி ரூபாயாகவும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு 7.82 கோடி ரூபாயாகவும், எம்.ஆர். விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு 9.05 கோடியாகவும் காட்டப்பட்டுள்ளது. எம்.ஆர். விஜயபாஸ்கரைத் தவிர எஞ்சிய அமைச்சர்களின் சொத்துமதிப்பு 400 சதவிகிதம் அளவுக்கு இந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.