Sat. Nov 23rd, 2024

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக.வில் எம்.ஜி.ஆர். காலத்து விசுவாசிகள், செல்வி ஜெயலலிதா காலத்து விசுவாசிகள், தர்மயுத்தம் ஓ.பி.எஸ்.காலத்து விசுவாசிகள் என முக்கால விசுவாசிகளும் வருத்தத்தில்தான் இருக்கிறார்கள். அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள 177 பேரில், எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு விசுவாசம் காட்டுபவர்கள்தான் 98 சதவிகிதம் பேர் உள்ளார்களாம்.

மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் காலத்து விசுவாசிகள் முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளதால், அவர்கள் அனைவரும் விரக்தியில் இருக்கிறார்கள். அதைவிட கொடுமையாக, தர்மயுத்தம் நடத்தியபோது, யார்யாரெல்லாம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு விசுவாசமாக இருந்தார்களோ, அத்தனை பேரையும் மறக்காமல், தற்போது பழிவாங்கிவிட்டாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அவரால் ஓரம்கட்டப்பவர்களில் மிகவும் பிரபலமாக இருப்பவர்கள், டாக்டர் மைத்ரேயன், சேலம் செம்மலை, சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, கவுண்டம்பாளையம் ஆறுகுட்டி, ராசிபுரம் முன்னாள் எம்.பி. சுந்தரம் என பட்டியல் நீளமானது. எடப்பாடி பழனிசாமியை விரோதித்துக் கொண்டு, ஓ.பி.எஸ். பக்கம் சாய்ந்த தங்களுக்கு கடைசி வரை ஆதரவாக நிற்பார் என்று கடந்த நான்காண்டுகளாக காத்திருந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர்.

இவர்கள் எல்லோரும் வெறும் விசுவாசத்தை மட்டும் ஓ.பி.எஸ்.ஸுக்கு காட்டவில்லை. அவரின் செல்வாக்கை அதிகரிக்க வேண்டும், அதிமுக.வில் அவரின் ஆளுமை நிலைக்க வேண்டும் என்பதற்காக, அவரவர் சக்திக்கு ஏற்ப, லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணத்தை வாரி இரைத்தவர்கள் ஏராளம்.

அந்த பட்டியலில் முக்கியமானவர் மதுரை திருமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம். 20119 நாடாளுமன்றத் தேர்தலோடு திருப்பரங்குன்றம் சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, அதிமுக வேட்பாளராக தன்னை அறிவிக்கும்படி ஓ.பி.எஸ்.ஸிடம் காலில் விழாத குறையாக மன்றாடியவர் முத்துராமலிங்கம். அவரின் கண்ணீர் கோரிக்கையை கண்டு மனமிரங்காமல், இ.பி.எஸ்.ஸிடம் சண்டை போட்டு அந்த வாய்ப்பை பெற்று தராமல் தட்டிக் கழித்தவர் ஓ.பி.எஸ். என்ற கோபம் முத்துராலிங்கத்தின் தலை உச்சிக்கே வந்துவிட்டது.

மதுரை வரும்போதெல்லாம் படை பரிவாரங்கள் சூழ ஓ.பி.எஸ்.ஸுக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பதையே தன் வாழ்நாள் கடமையாக செய்து கொண்டிருந்தவர் முத்துராமலிங்கம். மேலும், அமைச்சராக இருந்தாலும், ஆட்சியில் இல்லாதபோதெல்லாம் மதுரைக்கு ஓ.பி.எஸ். செல்கிற போது அவருக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுப்பதையும், நட்சத்திர ஹோட்டலில் அறை பதிவு செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தவர்தான் முத்துராமலிங்கம்.

அப்படி வாழ்நாள் முழுவதும் விசுவாசமாக இருந்த முத்துராமலிங்கத்திற்கு தற்போதைய தேர்தலிலும் போட்டியிடும் வாய்ப்பை பெற்று தரவில்லை ஓ.பி.எஸ்.., அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு பல நாள்கள் கடந்த பிறகும் விரக்தியில் இருந்து மீள முடியாமல் தவித்த அவர், இரு தினங்களுக்கு முன்பு திமுக.வில் ஐக்கியமாகிவிட்டார்.

அவருக்கு இணையாக செலவழித்தவர் என்று சொல்லாவிட்டாலும், பணிவு நாயகர் என்ற ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்பதை பிரதமர் மோடிக்கே அறிமுகப்படுத்தியவர், முன்னாள் எம்.பி. டாக்டர் மைத்ரேயன். மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவே, டெல்லி மேலிடத்தில் ஏதாவது முக்கியமான வேலை என்றால், டாக்டர் மைத்ரேயனை அழைத்துதான் ஒப்படைப்பார். காதும் காதும் வைத்த மாதிரி முடிக்கும் அளவுக்கு டெல்லி அரசியலில் செல்வாக்குப் பெற்றவர்.

அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியான அவர், அந்த இயக்கத்திலும், பாஜக.விலும் ஆளுமைமிக்க பதவிகளில் இருந்தவர். கடந்த 2000 ஆம் ஆண்டில் பாஜக.வில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவரின் திறமைக்கு, செல்வாக்குக்கு மதிப்பளிக்கும் விதமாக டாக்டர் மைத்ரேயனை மாநிலங்களவை உறுப்பினராக்கி அழகு பார்த்தார். 2002 ஆம் ஆண்டில் முதல்முறையாக ராஜ்ய சபா உறுப்பினரான அவர் மீண்டும், 2007 மற்றும் 2013 ஆண்டுகளிலும் இருமுறை பதவியேற்றதுடன், மூன்று முறை அந்த பதவியில் இருந்தார்.

அவரின் பதவிக்காலம் 2019ல் முடிவடைந்தவுடன் மீண்டும் அதே பதவிக்கு தன்னை பரிந்துரைப்பார் ஓ.பி.எஸ். என்று எதிர்பார்த்தார் டாக்டர் மைத்ரேயன். ஆனால், ஓ.பி.எஸ். கண்டு கொள்ளவில்லை. அதன்பிறகு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தார். அப்போதும் அவரது பக்கமே கண்ணை திருப்பவில்லை. தற்போதைய சட்டமன்றத் தேர்தலிலும் பாராமுகமாகவே இருந்தார் ஓ.பி.எஸ். மயிலாப்பூர் தொகுதியை குறி வைத்தார் டாக்டர் மைத்ரேயன். ஓ.பி.எஸ்., ஆதரவாளர் என்ற ஒரே காரணத்திற்காக அவரை உதாசீனப்படுத்திவிட்டார் இ.பி.எஸ்.,

இப்படி இரண்டு ஆளுமைகளுமே கைவிட்டு விட்டதாலும், தமிழகத்தில் பாஜக இதுவரை இல்லாத எழுச்சியை கண்டு கொண்டிருப்பதாலும் மீண்டும் தாய் வீட்டுக்கே செல்ல தீர்மானித்துவிட்டார் டாக்டர் மைத்ரேயன் என்ற தகவல், அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து கசிய விடப்படுகிறது.

இந்த தகவல் உண்மையா என பாஜக .வில் உள்ள அவரது பழைய நண்பர்களிடம் விசாரித்தோம். முடிவு எடுக்கும் கடைசி நிமிடம் வரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் எப்போதுமே டாக்டருக்கு இருந்தது கிடையாது. தாய் வீடான பாஜக.வுக்கு வந்தால் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராக இருக்கிறோம். அவரைப் போன்ற ஆளுமைகள் எல்லாம் பாஜக.வுக்கு திரும்பி வந்தால், 2026ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பதற்கான வியூகம், எளிதாக வெற்றியை எட்டிவிடும் என்பது என்போன்றோரின் நம்பிக்கை. வருக, வருக என உற்சாகமாக டாக்டர் மைத்ரேயனை வரவேற்க தமிழக பாஜக தயாராகவே இருக்கிறது என்றார் அவர்.

மே 2 முன்பாகவே, அதிமுக கூடாரம் காலியாகிவிடும் பேல….