அசாமில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கிழித்து தொங்க விட்டார்.
அவரின் உரையின் அம்சம் இதோ…
காங்கிரஸ் இன்று மிகவும் பலவீனமாகிவிட்டது, எந்த அளவிற்கும் இறங்கி யாருடனும் கைகோர்க்கும் நிலைக்கு காங்கிரஸ் சென்றுவிட்டது. நிலையான, நீடித்த சிந்தனை இல்லாத ஒரு கட்சி அசாம் மாநிலத்திற்கு ஒரு நிலையான அரசாங்கத்தை கொடுக்க முடியுமா?
ஆனால், பாஜகவுக்கு ஒரு கொள்கை, தலைமை மற்றும் நல்ல நோக்கங்கள் உள்ளன. எதிர்புறம் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு வலிமைமிக்க தலைவரோ நாட்டு நலனில் அக்கறையோ, கொள்கையோ சித்தாந்தமோ எதுவுமே இல்லை. அசாம் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்ல பாஜக பாடுபட்டு வருகிறது. பாஜக.வை ஆதரித்தால், இதுவரை இல்லாத முன்னேற்றத்தை குறுகிய காலத்திலேயே பாஜக அரசாங்கம், உங்களுக்கு ஏற்படுத்தி தரும் என்று உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக காலையில் மேற்கு வங்காளத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இந்த நாட்டின் மகள் என்ற அடிப்படையில் மம்தாவை மதிக்கிறோம். அவருக்கு நேரிட்ட விபத்தை அறிந்து குறித்து கவலைப்படுகிறோம்.விரைவில் அவர் குணமடைய வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை ஏமாற்றியதைப்போலவே, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களையும் மம்தா புறக்கணித்து விட்டார்.
மத்திய அரசு அனுப்பி வைத்த இலவச அரிசி, உதவித்தொகை ஆகியவற்றை மக்களுக்கு விநியோகிக்காமல் திரிணமுல் காங்கிரஸ் தடுத்துவிட்டது. பாஜக மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தால், மேற்கு வங்காள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கும். திரிணாமுல் காங்கிரஸ் என்றால், டிரான்ஸ்பர் மை கமிஷன், கமிஷன் தொகையை எனக்கு கொடுங்கள் என்று இன்றைக்கு அர்த்தம் கொள்ளும் அளவிற்குதான் அந்த கட்சியின் நடவடிக்கைகள் இருக்கின்றன.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.