பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஐபிஎஸ் அதிகாரி முருகன் மற்றும் 9 காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் சாராத பணிகள் ஒதுக்குமாறு அறிவுறுத்தபபட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியதை அடுத்து, தேர்தல் ஆணையம் தனது அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக, ஆளும்கட்சிக்கு சாதகமாக இருப்பார்கள் என்ற சந்தேகத்திற்குரிய காவல்துறை அதிகாரிகளை களையெடுக்க தேர்தல் ஆணையம் தயாராகிவிட்டது. அந்த வகையில், ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் முதல் மாவட்டஅளவிலான அதிகாரிகள் வரை ஒன்பது பேரை, அவர்கள் தற்போது வகித்து வரும் பதவிகளில் இருந்து மாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தென்மண்டல காவல்துறை தலைவர் (ஐஜி) முருகன் ஐபிஎஸ்., தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றம் (இவர் மீதான பாலியல் புகார் விசாரணை நிலுவையில் உள்ளதுர்)
திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு – கோபால சந்திரன்,
சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு – கோவிந்தராஜ்,
சென்னை மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையர்கள் – ஆர். அன்பரசன், எம்.வேல்முருகன், ஹெச்.கிருஷ்ணமூர்த்தி,
சென்னை பொருளாதார குற்றப் பிரிவு – எம்.எஸ்.எம் வளவன்,
வேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு – திருநாவுக்கரசு,
பெண்களுக்கு எதிரான குற்ற விசாரணை பிரிவு (விழுப்புரம்) – ராதாகிருஷ்ணன்,
ராமநாதபுரம் மாவட்ட குற்ற ஆவண பணியகத்தில் பணியாற்றி வந்த சுபாஷ்,
மேற்கண்ட காவல்துறை அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.