Sat. Nov 23rd, 2024

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் சூடு பிடித்துள்ளது. அங்கு ஆளும் அரசான திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க பாரதிய ஜனதாக் கட்சி புதிய, புதிய வியூகங்களை அமல்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் நட்டா மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர், மேற்கு வங்க மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள அந்த மாநிலத்தில், முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, இன்று ஜகர்கிரம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு திரண்டிருந்த மக்களிடம் பேசிய அவர், காலதாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். நான் பயணம் செய்த ஹெலிகாப்டரில் சிறிய கோளாறு ஏற்பட்டுவிட்டது. அதனால் இங்கு வர தாமதமாகிவிட்டது. அதை இயந்திர கோளாறு என்றுதான் நான் சொல்வேனே தவிர, சதிச்செயல் என்று கூற மாட்டேன். ஆனால், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, எது நடந்தாலும் அதை சதிச் செயலாகவே பார்க்கிறார்.

அவருக்கு நேரிட்டது விபத்து என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது. ஆனால், அவர் அதை சதிச்செயல் என்கிறார் என்று கிண்டலடித்தார் அமித்ஷா.