அதிமுக கூட்டணியில் பாஜக.வுக்கு 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் ஒதுக்ப்பட்டுள்ளது. பொதுவாக, கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை பல கட்டமாக நடைபெறும். ஒரு கட்டத்தில் இரண்டு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், கூட்டாக இணைந்து தொகுதி பங்கீடு ஓப்பந்தத்தில் கையெழுத்திட்டு, ஊடகங்களைச் சந்தித்து தெரிவிப்பார்கள்.
அதிமுக கூட்டணியில் உள்ள பாமக.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோது கூட, அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் டாக்டர் அனபுமணி, அக்கட்சித் தலைவர் ஜிகே மணி ஆகியோர் பங்கேற்றனர். தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் குறித்து, ஊடகங்களிலும் இரண்டு கட்சியைத் சேர்ந்த தலைவர்களும் தொகுதி பங்கீடு குறித்துப் பேசினர்..
ஆனால், பாஜக.வுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியானபோது, இரண்டு கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. நேற்று இரவு, அதாவது பிப்ரவரி 5 ஆம் தேதி இரவு 11 மணியளவில் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, வெளியிடப்பட்டது. அதே போல, கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் ஒதுக்கப்பட்டது.
இதில் என்ன சிக்கல் என்றால், அதிமுக.வோடு கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பாஜக குழுவில் மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டியும், பேச்சுவார்த்தைக் குழுவில் உள்ளார். அவரும் முதல்வரும், துணை முதல்வரையும் இரண்டு முறை சந்தித்துப் பேசினார். இப்படி பேச்சுவார்த்தை நடைபெற்ற வந்த நிலையில், தமிழக பாஜக தலைவரைக் கூட அழைக்காமல், இணையம் வழியாக ஒப்பந்நத்தில் இரண்டு கட்சித் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர். இந்த நேரத்தில், பாஜக சார்பில் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியல் ஒன்றும் வெளியாகியள்ளது. அதன் விவரம் இதோ….
BJP நிற்கும் தொகுதிகள்
மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் ( உத்தேசப் பட்டியல்)
(1)மயிலாப்பூர்
K.T.ராகவன்
(2)காரைக்குடி
H.ராஜா
(3)சேப்பாக்கம்
குஷ்பு
(4)வேளச்சேரி
டால்பின் ஸ்ரீதர்
(5) காஞ்சிபுரம்
கேசவன்
(6)திருத்தணி
சக்கரவர்த்தி
(7)பழனி
கார்வேந்தன்
(8)சிதம்பரம்
ஏழுமலை
(9)கிணத்துக்கடவு
IPS அண்ணாமலை
(10)கோவை தெற்கு
வானதி சீனிவாசன்
(11)நாமக்கல் ராசிபுரம்
L.முருகன் (தலைவர்
(12)ஆத்தூர்
வி.பி.துரைசாமி Son
Dr.பிரேம்
(13)திருவாரூர்
கருப்பு
முருகானந்தம்
(14)திருவண்ணாமலை
தணிகைவேல்
(15)வேலுர்
கார்த்தியாயினி
(16)ஒசூர்
நரேந்திரன்
(17)தூத்துக்குடி
சிவ முருக ஆதித்தன்
(18)நெல்லை
நயினார்
நாகேந்திரன்
(19) ராஜபாளையம்
நடிகை கவுதமி
(20)துறைமுகம்
வினோஜ் பி.செல்வம்
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கெனவே அங்கு, தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். மேலும், நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நாகர்கோவில் உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார்.