தகவல் உதவி சரவணமுத்து…..
சென்னையில் 5 தொகுதிகள் உள்பட பாஜக கேட்ட தொகுதிகள் அனைத்தையும் அதிமுக வழங்கியுள்ளது. அதன்படி, சென்னையில் மயிலாப்பூர், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, வேளச்சேரி, கொளத்தூர் ஆகிய 5 தொகுதிகள் வழங்க அதிமுக தலைமை ஒப்புக்கொண்டது.
அதில், மயிலாப்பூரில் மேலிட சிபாரிசில் கே.டி.ராகவன் நிறுத்தப்படுகிறார். துறைமுகம் தொகுதி பாஜ இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வத்துக்கும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி நடிகை குஷ்பு, வேளச்சேரி தொகுதி மாநில செயலாளர் டால்பின் ஸ்ரீதர் ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது.
கொளத்தூர் தொகுதியை பாஜ வேண்டாம் என்று கூறியது. ஆனால் தோற்கும் தொகுதியை நாங்கள் மட்டுமே வைத்திருக்க முடியாது என்று கூறி, கொளத்தூரை பாஜவுக்கு தள்ளிவிட்டுள்ளது.
மேலும், பெரும்புதூர் அல்லது காஞ்சிபுரம் வேண்டும் என்றும் கேட்டனர். அதில் காஞ்சிபுரத்தை அதிமுக வழங்கியுள்ளது. அதில் கேசவன் என்பவர் நிறுத்தப்படுகிறார்.
திருத்தணியில் சக்கரவர்த்தியும், பழனியில் முன்னாள் எம்பி கார்வேந்தன், சிதம்பரத்தில் ஏழுமலையும் போட்டி போடவுள்ளனர்.
மேற்கு மண்டலத்தில் கிணத்துக்கடவு தொகுதியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, கோவை தெற்கில் வானதி சீனிவாசன் மற்றும் ஒரு தொகுதி சி.பி.ராதாகிருஷ்ணனின் பரிந்துரையில் ஒருவருக்கு வழங்கப்படுகிறது.
பாஜ தலைவர் எல்.முருகன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் போட்டியிட விரும்புவதால் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, அக்கட்சியின் துணை தலைவர் வி.பி.துரைசாமியின் மகன் டாக்டர் பிரேமுக்கு ஆத்தூர் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் கருப்பு முருகானந்தமும், திருவண்ணாமலையில் தணிகைவேல், வேலூரில் கார்த்தியாயினி, ஓசூரில் நரேந்திரன் நிற்கின்றனர். இதற்காக, இந்த தொகுதிகளை பாஜ கேட்டு பெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் தொகுதியை பாஜ கேட்டது. பின்னர் திடீரென தங்களுக்கு தூத்துக்குடி தொகுதியை ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. அங்கு மாவட்ட பொதுச் செயலாளர் சிவமுருக ஆதித்தன் போட்டியிடுகிறார்.
நெல்லையை நயினார் நாகேந்திரன், ராஜபாளையத்தை நடிகை கவுதமி ஆகியோருக்காக வாங்கியுள்ளனர்.
நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா ஒரு தொகுதியை கேட்டு வாங்கியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை ஹெச்,ராஜாவுக்காக கேட்டு வாங்கியுள்ளனர்.
இதை தவிர கன்னியாகுமரியில் 2 தொகுதிகள் வாங்கியுள்ளனர்.
ஈரோடு, பவானி, சூலூர், கேவிகுப்பம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை கிழக்கு, மதுரை வடக்கு ஆகிய இடங்களை கேட்டு பெற்றுள்ளனர்.
தென் மாவட்டங்களில் மட்டும் பாஜ 13 தொகுதிகளை கேட்டு வாங்கியுள்ளது.
தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள சமுதாயமான தேவேந்திரகுல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை 7 உட்பிரிவுகளை இணைத்து ஒன்றாக அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதேபோல பட்டியல் இனப்பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதில் 7 உட் பிரிவுகளை ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜ ஏற்றுக் கொண்டது. இதற்கான சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது. ஆனால், இன்னும் நிறைவேற்றவில்லை.
சென்னை வந்த பிரதமர் மோடி நான் நரேந்திரன், நீங்கள் தேவேந்திரர் என்று கூறினார். இதனால் அந்த சமுதாய இளைஞர்களை பாஜக பக்கம் திருப்பியது. ஆனால் பாஜ வாங்கிய 20 தொகுதிகளில் ஒரு தொகுதிகள்கூட தேவேந்திரர்களுக்கு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இது அந்த சமுதாயத்தினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் தேவேந்திரர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 13 தொகுதிகளை பாஜ கேட்டு வாங்கியுள்ளது.